விஜயகாந்த் மரண செய்தி கேட்டு கதறிய வடிவேலு, நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வராததன் காரணம் இதுவா? சரத்குமார் பேச்சு

First Published Jan 20, 2024, 4:25 PM IST

விஜயகாந்த் உடலுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்த வரவில்லை என்றாலும், ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல், அழுது புரண்டதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்று நடந்த, நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் வடிவேலு கலந்து கொள்ளாதது... மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

RIP Captain Vijayakanth

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மறைவால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. விஜயகாந்த் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், தினம் தோறும் அவரின் நினைவிடத்திற்கு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வந்து தங்களின் அஞ்சலியை செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
 

விஜய், ரஜினி, போன்ற உச்ச நட்சத்திரங்கள் முதல்... விஜயகாந்த் கொடுத்த வாய்ப்பால் தமிழ் சினிமாவில் வளர்ந்த, பலர் கேப்டன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி... அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக மன்சூர் அலிகான் விஜயகாந்தின் கால்மாட்டிலேயே உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் அமர்ந்து கண்ணீர் சிந்தினார். அதே போல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியது மட்டும் இன்றி அவரின் இறுதி சடங்கிலும் கலந்து கொண்டார்.

Meena Photos: இவங்களுக்கு 47 வயசுனு சொன்னா யார் நம்புவாங்கா.. டீன் ஏஜ் பெண்களுக்கு சவால் விடும் அழகில் மீனா!
 

Vadivelu and vijayakanth

ஆனால் விஜயகாந்த் கொடுத்த வாய்ப்பால் முன்னணி இடத்திற்கு வந்த வடிவேலு, கடைசி வரை விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. இது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. 

 இது குறித்து வடிவேலுவின் நண்பரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியுமான மாலின் என்பவர் யூ டியூப் தளத்திற்கு கொடுத்த பேட்டியில், வடிவேலு வரல... வரலனு சொல்லி அவரை கார்னர் செய்கின்றனர். ஆனால் உண்மையில் விஜயகாந்த் செய்த உதவிகளையெல்லாம் சொல்லி வடிவேலு எந்த அளவு வருத்தப்பட்டார் என்பது அவருடன் நெருங்கி பழகிய எங்களைப்போன்றவர்களுக்கு தான் தெரியும். வடிவேலுவின் தாய், தம்பி ஆகியோரின் மறைவுக்கு நடிகர் சங்கத்தில் இருந்து யாராவது வந்தார்களா என கேள்வி எழுப்பிய மாலின், 10 வருஷம் நடிக்க முடியாமல் இருந்தபோது யாரும் கண்டுகொள்ளாததால் வடிவேலு மனம் வெறுத்து போனதாக மாலின் கூறினார்.

Vijaya Prabhakaran: கேப்டன் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்? அப்பா பற்றி பேசி கதறி அழுத விஜய பிரபாகரன்

எல்லாரும் வடிவேலு சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் விஜயகாந்த் மறைவுச் செய்தி கேட்டு கண்ணீர்விட்டு அழுதார். ஒருநாள் முழுவதும் அவர் சாப்பிடவில்லை. நேரில் சென்றால் எதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடும் என்பதால் தான் அவர் செல்லவில்லை. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என கூறி இருந்தார்.

Vadivelu

அன்று வரவில்லை என்பதை ஏற்று கொண்டாலும், நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சியிலாவது வடிவேலு கலந்து கொள்வார் என கார்த்திருந்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் நெட்டிசன்கள் சிலர் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவார்... கேப்டனுக்காக வரமாட்டார் என கொந்தளிக்கும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

போதை கடத்தல் தொழிலதிபருடன் தொடர்பு.. கணவரை விவாகரத்து செய்கிறாரா நமிதா? கொளுத்தி போட்ட பயில்வான்!

இது ஒரு புறம் இருந்தாலும், வடிவேலு வராதது பற்றி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், வடிவேலு கேப்டனை நினைத்து வீட்டில் உட்கார்ந்து அழுது இருக்கலாம். ஒரு வேளை இங்கு வந்தால் திட்டுவார்கள் என்று நினைத்து வராமல் கூட இருக்கலாம் என கூறியுள்ளார். உண்மையில் வடிவேலு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு இது தான் காரணமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

click me!