நான் மட்டும் நயன்தாராவுக்கு சளைத்தவளா என்ன? தரம் பிரித்து... லிஸ்ட் போட்டு.. கோடியில் கல்லா கட்டும் சமந்தா!

First Published Mar 19, 2024, 12:33 PM IST

சமீபத்தில் நடிகை நயன்தாரா விளம்பர படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலான நிலையில், தற்போது சமந்தா வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

தெலுங்கில், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தின் தெலுங்கு வர்ஷனாக எடுக்கப்பட்ட 'Ye Maaya Chesave' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பல்லாவரத்து பெண்ணான நடிகை சமந்தா.
 

இதைத்தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் விஜய், தனுஷ், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்த நடிகை சமந்தா, லைம் லைட்டில் இருக்கும்போதே... பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ஹைதராபாத்தில் செட்டில் ஆனார்.

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில்.. விஜய் சேதுபதி கேரக்டரை நிராகரித்த 2 பிரபலங்கள்! ஃபர்ஸ்ட் சாய்ஸ் யார் தெரியுமா
 

திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, சாமர்த்தியமாக குடும்பத்தையும் - சினிமா கேரியரையும் பேலன்ஸ் செய்து கொண்டு சென்ற நிலையில், யார் கண் பட்டதோ... சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே ஏற்பட்ட  மனக்கசப்பு திருமண முறிவு வரை கொண்டு சென்றது.
 

பின்னர் இருவருமே பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர். இந்த தகவல் பல ரசிகர்களை பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாக சைதன்யாவின் நினைவுகளில் இருந்து வெளியே வர தோழிகளுடன் ஆன்மீக யாத்திரை சென்று வந்த சமந்தா, மீண்டும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கினார்.

குக் வித் கோமாளி சீசன் 5.! வெளியேறிய வெங்கடேஷ் பட்.. அவருக்கு பதில் செஃப் தாமுடன் கை கோர்த்த பிரபல நடிகர்!
 

அப்போதுதான் திடீரென மயோசிட்டிஸ் எனப்படும் அரிய வகை தசை அழிச்சி நோயால் பாதிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் எழுந்து கூட நடக்க முடியாமல் இருந்த சமந்தா, பின்னர் அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். மேலும் மயோசிட்டிசில்  இருந்து முழுமையாக வெளியே வர குட்டி பிரேக் எடுத்து கொண்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா, தற்போது மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.
 

இவர் நடிப்பில், கடைசியாக கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த 'குஷி' படம் தான் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது பாலிவுட் திரையுலகில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அது மட்டும் இன்றி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

கொசுவலை போன்ற சேலையை... காற்றில் பறக்கவிட்டு கண்ணை பறிக்கும் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்! அல்டிமேட் போட்டோஸ்!
 

மீண்டும் தன்னுடைய கேரியரில் பிஸியாகி உள்ள சமந்தா, அடிக்கடி தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக போட்டோஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல் சில விளம்பர படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.  இவர் விளம்பரங்களில் நடிக்க 1.5 கோடி முதல் ரூபாய் முதல் 2 கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் திரைப்படங்களில் நடிக்க 7 கோடி முதல் 8 கோடி வரையம், வெப்சீரிஸ் என்றால் 10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் என  லிஸ்ட் போட்டு கேட்கிறாராம்.
 

சமீபத்தில் நடிகை நயன்தாரா 50 வினாடிகள் விளம்பரத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு சளைத்தவர் நான் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாகவே இவரும் கோடிகளில் கல்லாக கட்டி வருவதாக திரைப்பட வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

மஹாவுக்கு தெரியவந்த உண்மை! வீட்டை விட்டு வெளியேறிய தருணம்... காதலை உணர்வாரா சூர்யா! ஆஹா கல்யாணம் அப்டேட்!

click me!