பாலிவுட் படத்தில் முன்னணி ஹீரோவின் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி! ஜப்பானில் நடக்கும் படப்பிடிப்பு போட்டோஸ்!

First Published Feb 13, 2024, 1:14 PM IST

நடிகர் அமீர் கான் மகன், ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

நடிகர் அமீர் கானை தொடர்ந்து, அவருடைய மகனை ஜுனைத் கானும் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகினார். இந்த படத்தில் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இப்படம் மூலம் சாய் பல்லவி பாலிவுட் திரையுலகில் நுழைகிறார்.

இந்த ஆண்டில் இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில்... தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Priyanka Mohan Net Worth: நடிச்சது 5 தமிழ் படங்கள் தான்! கோடிகளில் சொத்து சேர்த்துள்ள நடிகை பிரியங்கா மோகன்!
 

ஜப்பானில் படக்குழுவினர் உள்ள நிலையில், அங்கு சப்போரோ பனி விழாவை ஜூனைத் கான் மற்றும் சாய் பல்லவி ரசித்து கொண்டிக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. சாய் பல்லவி மற்றும் ஜுனைத் கான் இருவருமே தங்களை குளிரில் இருந்து தற்காத்து கொள்ள  சிக் ஜாக்கெட், கோட் மற்றும் இயர் மஃப்ஸ் அணிந்துளளனர்.

படக்குழுவினரோடு இருவருமே தங்களின் மகிழ்ச்சியை பரிமாறி கொள்ளும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை சுனில் பாண்டே இயக்க, அமீர் கான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா இணையும் முதல் பாலிவுட் படம்.. ரிலீஸ் தேதியுடன் வந்த அசத்தல் அறிவிப்பு

click me!