கோலிக்கு 3, 10 ரன்னில் கேட்சை விட்ட பஞ்சாப் – மரண காட்டு காட்டிய கோலி - ஆர்சிபி 241 ரன்கள் குவிப்பு!

First Published May 9, 2024, 10:48 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 58ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

தரம்சாலாவில் நடைபெற்று வரும் 58ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

இதில் ப்ளெசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

கோலி 3 மற்றும் 10 ரன்கள் எடுத்திருந்த போது 2 கேட்சுகளை பஞ்சாப் வீரர்கள் கோட்டைவிட்டனர். இதே போன்று ரஜத் படிதாருக்கும் அவர் 0 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் கோட்டவிட்டனர். இதற்கான பலன் இருவரும் அரைசதம் அடித்தனர். படிதார் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

இந்த சீசனில் அவர் 3ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக, 19 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். தற்போது 2ஆவது முறையாக 21 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இந்தப் போட்டியில் ஆர்சிபி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் குவித்துள்ளது. அப்போது மழை குறுக்கிட்டது. எனினும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

படிதார் 55 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி 92 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர், 47 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 92 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 18, மகிபால் லோம்ரார் 0 ரன்னில் வெளியேற கடைசியாக கேமரூன் க்ரீன் தன் பங்கிற்கு சரமாரியாக விளையாடி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. பவுலிங்கை பொறுத்த வரையில் வித்வத் காவேரப்பா 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

click me!