Anirudh : பாடல்களே இல்லாமல் ஒரு படம்.. BGMல் மிரட்ட வருகின்றார் "ராக் ஸ்டார்" - படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

First Published Apr 28, 2024, 3:06 PM IST

Rock Star Anirudh : தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களம் இறங்கியவர் தான் அனிருத் ரவிச்சந்திரன்.

3 movie

அனிருத் இசையில் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. பின்னனி பாடகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ள அனிருத் இசையில் இறுதியாக கடந்த ஆண்டு வெளியான "லியோ" திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது.

Yuga Krishna : டக்குனு பாக்க ரம்யா பாண்டியன் மாதிரியில்ல? கிளாமரில் அசத்தும் நடிகை யுகா கிருஷ்ணன் - Hot Pics!

Rock star

இந்த 2024 ஆம் ஆண்டில் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன், தல அஜித்தின் விடாமுயற்சி, சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படம், விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் தெலுங்கு மொழியில் ஜூனியர் என்டிஆரின் தேவாரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Vijay devarakonda

இந்நிலையில் விரைவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகவுள்ள அவருடைய 12-வது திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கவிருக்கிறார். ஆனால் இந்த திரைப்படத்தில் பாடல் ஏதும் இடம்பெறாது என்றும், அனிருத்தின் பின்னணி இசையே மிகப்பெரிய முக்கியத்துவம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாடலுக்கு எது முக்கியம்? புரிந்தவன் ஞானி; புரியாதவன் அஞ்ஞானி - இளையராஜாவுக்கு செம்ம நோஸ் கட் கொடுத்த வைரமுத்து

click me!