ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா திருமண வரவேற்பு! கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்பு! போட்டோஸ்

First Published Apr 1, 2024, 8:15 PM IST

பிரபல நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடந்த நிலையில், பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
 

சின்னத்திரையில், 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம், தன்னுடைய காமெடி, மெமிக்கிரி, உடல் மொழி போன்றவற்றால் பலரை சிரிக்க வைத்தவர் ரோபோ ஷங்கர்.

சின்னத்திரையில் அறிமுகமாகும் முன்னரே Un credited ரோல்களில் பல படங்களில் நடித்திருந்தாலும்... ரோபோ ஷங்கர் என்பவரை கவனிக்க வைத்தது சின்னத்திரை காமெடி நிகழ்ச்சி தான்.

த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்! அஜித், மோகன் லால், சிரஞ்சீவியை தொடர்ந்து மற்றொரு டாப் நடிகருக்கு ஜோடியாகிறாரா?

இதை தொடர்ந்து பல்வேறு விஜய் டிவி நிகழ்ச்சியில், போட்டியாளராகவும், கெஸ்ட்டாகவும், நடுவராகவும் தோன்றிய ரோபோ ஷங்கருக்கு பட வாய்ப்புகளும் குவிய துவங்கியது.

ஒருகட்டத்தில் விஜய், அஜித், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில்... பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். லெஜெண்ட் சரவணன் நடித்த 'லெஜெண்ட்' படத்தில் ரோபோ ஷங்கர் கதாபாத்திரம் பாராட்டை குவித்தது.

Balaji Murugadoss: பிக்பாஸ் பாலாஜி முருகதாஸுக்கு திடீர் என நடந்த ரகசிய திருமணம்? வைரலாகும் புகைப்படம்!

தற்போது சிறு படஜெட் படங்கள் முதல்... பிக்படஜெட் ஹீரோக்கள் படங்கள் வரை நடித்து வரும் ரோபோ ஷங்கரின், மகளுக்கு சமீபத்தில் அவரது சொந்த ஊரான மதுரையில் மிக சிறப்பாக திருமணம் நடந்தது.

ரோபோ ஷங்கரின் மகளும், விஜயுடன் பிகில், கார்த்தி நடித்த விருமன் போன்ற படங்களில் நடித்துள்ளார். பல வாய்ப்புகள் இவருக்கு வந்த போதும்... சில படங்களை மட்டுமே தொடர்ந்து நடித்து வந்தார்.

Premalu OTT Release Date: சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்நிலையில், இந்திரஜாவுக்கும், ரோபோ ஷங்கரின் குடும்ப நண்பரின் மகன் கார்த்திக் என்பவரும் காதலித்து வந்த நிலையில், பின்னர் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அண்மையில் திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்தது. 

சுடரை வளைத்து பிடித்த வேலு.. எழிலை விரட்டி விடும் மனோகரி, நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட் !

திருமணத்தை தொடர்ந்து... இந்திரஜா - கார்த்திக்கின் திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. இதில் ஏராளமான திரைபிரபலன்கள் கலந்து கொண்டு... மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.   

குறிப்பாக கமலஹாசன் முதல், சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி, பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்விராஜன், ராமராஜன், தம்பி ராமய்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுப்பு பஞ்சு, செளந்தர்ராஜா, மாஸ்டர் மகேந்திரன், கலா மாஸ்டர், இயக்குனர்கள் S. P. முத்துராமன், லிங்குசாமி, ஐசரி கணேக்ஷ், நடிகைகள் அம்பிகா, ரேகா, அதிதி சங்கர், நளினி , திவ்யதர்க்ஷனி உள்பட ஏராளமான  திரையுலக பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகிணி நினைத்தது நடந்துடுச்சு! மீனா மீது விழுந்த திருட்டு பழி! வெளுத்து வாங்கிய முத்து.. சிறகடிக்க ஆசை அப்டேட்

click me!