சிம்பு தனுஷ் இடையே நிலவிய போட்டி.. அப்போது வெளியான ரஜினிகாந்த் மகளின் ஆடியோ! - ஒரு சின்ன Rewind!

First Published Aug 24, 2023, 9:41 AM IST

தனுஷ் நடிக்க வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடிகர் சிம்பு நடித்துவந்தாலும், பல ஆண்டுகளாக இருவரும் கடுமையான போட்டியாளர்களாவே பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 2004ம் ஆண்டு, தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்தபோது, ​​சிம்பு சம்பந்தப்பட்ட ஒரு ஆடியோ வெளியானது நினைவிருக்கிறதா?

Aishwarya Rajinikanth Marriage

கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிம்பு இடையில் நடக்கும் உரையாடல் குறித்து ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாகவும், இன்னும் பல சர்ச்சையான சில விஷயங்களும் உரையாடப்பட்டது. ஆனால் பின்னர் அது போலியான ஒன்றும் என்றும் கூறப்பட்டது.

இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தோல்வி படம்... ஆதிபுருஷ் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா?

Aishwarya Rajinikanth and Simbu Leaked Audio

அது உண்மையோ அல்லது பொய்யோ, ஆனால் அந்த ஆடியோ வெளியான பிறகு சிம்பு மற்றும் தனுஷ் இடையே இருந்த போட்டி வேறு ஒரு பரிமாணத்தை அடைந்தது என்று தான் கூற வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்குகின்ற வகையில் தங்கள் படங்களில் வசனங்களை அல்லது பாடல்களை வைத்ததாகவும் கூறப்பட்டது.

Simbu and Dhanush in Award Function

ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷ், சிம்புவின் திரைவாழ்க்கையை முடக்கப்பார்கிறார் என்றெல்லாம் செய்திகள் எழுந்தன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு சந்தானத்தில் நடிப்பில் வெளியான சக்க போடு போடு ராஜா என்ற பட நிகழ்வில் தனுஷ் மற்றும் சிம்பு பங்கேற்று பேசிய பொழுது இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல போட்டியாளர்களாக திகழ்கின்றோமே தவிர, எங்களுக்குள் தனிப்பட்ட மனஸ்தாபங்கள் ஏதுமில்லை என்று கூறினார். 

Pathu Thala Audio Launch

அண்மையில் கூட பத்து தல திரைப்படத்தின் போது பேசிய நடிகர் சிம்பு, தனக்கு நடிகர் தனுஷ் படங்களோடு போட்டி இருக்கிறதே தவிர அவர் மேல் பொறாமை இல்லை என்றார். அவருடைய பொல்லாதவன் திரைப்படத்தை பார்த்து அவர் எந்த அளவுக்கு மகிழ்ந்தார் என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் அது என்னை இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகர உத்வேகம் அளித்தது என்று அவர் கூறினார்.

Indian Actor Dhanush

சிம்பு தனது திரை பயணத்தில் கடந்த சில ஆண்டுகளாகி பல சறுக்கல்களை சந்தித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் 10க்கும் மேற்பட்ட படங்களை தனது கையில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் சிம்புவும் சிறந்த ஒரு கம் பேக் கொடுப்பார் என்று ஆவலோடு அவருடைய 48வது பட வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் சிம்புவின் ரசிகர்கள்.

ஜஸ்ட் மிஸ்... இல்லேனா என்ன ஆகிருக்கும்? ஓட்டல் ரூமில் இருந்த ரகசிய கேமராவை அலேக்காக தூக்கிய தமிழ் பட நடிகை

click me!