Rasipalan : இந்த ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் தாயை ராணி போல் பார்த்துக் கொள்வாரக்ளாம்.. நீங்க எந்த ராசி?

First Published Mar 28, 2024, 12:44 PM IST

தனது தாயை ராணி போல் பார்த்துக்கொள்ளும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரங்களை வைத்தே அவரின் குண நலன்கள் பண்புகள் குறித்து கணிக்கலாம். அந்த வகையில் தனது தாயை ராணி போல் பார்த்துக்கொள்ளும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம் :

கடக ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் தாய்மார்களுடன் ஆழ்ந்த உணர்ச்சி ரீதியான தொடர்புகளை கொண்டிருப்பார்கள். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் தங்கள் அம்மாக்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். தங்கள் தாயின்  கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் தாயின் வழிகாட்டுதல் படியே நடந்து கொள்ள விரும்புவார்களாம்.. இதயப்பூர்வமான உரையாடல்கள் அல்லது தனது தாயுடன் ஒன்றாகத் தரமான நேரத்தைச் செலவழித்தல் போன்றவற்றின் மூலம், ஒரு கடக ராசிக்காரர் தனத அம்மாவை எப்போதும் அன்பாக கவனித்துக்கொள்வாராம். தனது தாய்க்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள்..

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் பாரம்பரியம் மற்றும் குடும்ப மதிப்பு மீது ஆழமான வலுவான உணர்வைக் கொண்டிருப்பார்கள்,,இவர்கள் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட மகன்களாக இருப்பார்கள். தங்கள் தாய்மார்களை கவனித்துக்கொள்வதிலும், அவர்கஓன் மகிழ்ச்சியையும் உறுதி செய்வதிலும் பெருமிதம் கொள்கிறார்கள். தன் அம்மாவிற்கு பிடித்த உணவை சமைப்பதாக இருந்தாலும், அவருக்கு பரிசு வழங்கினாலும் தனது தாய்க்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்கினாலும், ரிஷப ராசியில் பிறந்த ஆண் தன் அம்மாவை அரவணைக்க எந்த எல்லைக்கும் செல்வார்.ய்வார்கள்.

Virgo

கன்னி

கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் தாய்மார்கள் தங்களுக்காக செய்த அனைத்து விஷயங்களை மனதார பாராட்டுவார்கள், தனது தாய் தங்களுக்கு காட்டும் அன்பையும் கருணையையும் பத்து மடங்கு திருப்பிச் செலுத்த முயற்சி செய்வார்கள். எப்போது தனது தாய்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் விரும்புவார்கள். எந்த நேரத்திலும் எந்த உதவியை செய்யவும் தயாராக இருப்பார்கள்.

மீனம் 

மீன ராசிக்காரர்கள் இயல்பிலேயே இரக்கமும், பச்சாதாபமும் கொண்டவர்கள், இந்த ராசிக்காரர்கள் தங்கள் தாய்மார்களின் தேவைகள் மற்றும்  உணர்வுகளைப் பற்றி ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர். எனவே தங்கள் தாய்க்கு தேவையான ஆறுதலையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தாய் ஒருபோதும் கஷ்டப்படக்கூடாது என்று நினைப்பார்கள்..மேலும் தங்கள் தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செ

click me!