Rasi Palan : இந்த 3 ராசிகள் மிகவும் ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார்களாம்; இவங்க கிட்ட கொஞ்சம் கவனமாக இருங்க!

First Published May 2, 2024, 9:20 PM IST


ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியும் அதன் தனித்துவமான தன்மையைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர்கள் கருதப்படும் மூன்று ராசிகளை பற்றி தான் இங்கு சொல்லப் போகிறோம்.

ஜோதிட சாஸ்திரப்படி, 12 ராசிகளின் இயல்பு மற்றும் ஆளுமை ஒருவருக்கொருவர் வேறுபட்டது. இங்கே நாம் அத்தகைய ராசி அறிகுறிகளை பற்றி பார்க்க போகிறோம். அந்த வகையில் ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர்கள் கருதப்படும் ராசிகள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இன்றைய கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேஷம்: ஜோதிடத்தின்படி, மேஷ ராசிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் தைரியசாலிகள் மற்றும் அச்சமற்றவர்கள். மேலும் இவர்கள் வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க விரும்புகிறார்கள். இவர்கள் தங்கள் வேலையில் எந்த தலையிட்டையும் விரும்புவதில்லை. இவர்கள் செல்வம் சேர்ப்பதில் வல்லவர்கள். இவர்கள்  கூட்டாளர்களை நேசிக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் கோபமும் வரும். மேஷம் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது இது அவர்களுக்கு இந்த குணத்தை கொடுக்கிறது.

சிம்மம்: சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்பதால் சிறு வயதிலிருந்தே சிம்ம ராசிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் பண்பு உருவாகிறது. இவர்கள் தங்களின் மேலாதிக்கத்தை ஏற்க மறுப்பவர்களை தங்கள் பாதையில் இருந்து விலக்கி வைக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் தனிப்பட்ட செயல்திறனில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். மேலும்  இவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்களை சரியான வழியில் வழிநடத்தும் திறன் காரணமாக சிறந்த தலைவராக கருதப்படுகிறது. சிம்ம ராசியின் அதிபதி சூரியன் இது அவர்களுக்கு இந்த குணத்தை கொடுக்கிறது.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் பொதுவாக மற்றவர்களை ஆளும் நிலையில் இருப்பார்கள். மேலும் இவர்கள் மிகவும் மர்மமானவர். எப்படியெனில், இவர்கள் எப்போது என்ன திட்டமிடுகிறார் என்பது பலருக்குத் தெரியாது. புத்திசாலித்தனம் என்பது இந்த ராசியின் அடையாளம். கொடுக்கப்பட்ட பொறுப்பைச் சரியாகச் செய்து முடிக்கும் திறமை இவர்களுக்கு உண்டு.

click me!