Lokesh : தலைவர் 171.. இணையும் வாரிசு நடிகை மற்றும் மூத்த நடிகர்? தயார் நிலையில் டீசர் - லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

First Published Apr 15, 2024, 11:17 AM IST

Lokesh Kanagaraj : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விரைவில் தலைவர் 171 பட பணிகளை துவங்க உள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் நடிக்க உள்ள கதாபாத்திரங்கள் குறித்த யுகங்கள் இணையத்தில் அதிகரித்துள்ளது.

Lokesh Kanagaraj

ஏற்கனவே தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய இரு வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது கனவு நாயகனான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்கவிருக்கிறார். 

Vishal about Varalaxmi : வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் பற்றிய கேள்வி; ஒளிவு மறைவின்றி ஓப்பனாக பதிலளித்த விஷால்

Shobana

வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி தலைவர் 171 படத்தின் டைட்டில் மட்டும் டீசர் வெளியாகவுள்ள நிலையில் அந்த டீசருக்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அதேபோல இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை சோபனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நாயகியாக நடிக்க உள்ளார் என்கின்ற தகவலும் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

Shruti Haasan

இந்த நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின் படி லோகேஷ் கனகராஜ் உடன் நாயகியாக இனிமேல் என்கின்ற இசை ஆல்பத்தில் நடித்த பிரபல நடிகை மற்றும் பாடகி சுருதிஹாசன் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார் என்றும், தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சத்யராஜ் அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பணியாற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இன்னும் படக்குழு இந்த தகவல்களை உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

"குணசேகரன் ஜெய்ச்சுகிட்டே இருக்காரு".. வெறுப்பில் எதிர்நீச்சல் Fans - திட்டி தீர்க்கப்படும் திருச்செல்வம்!

click me!