Rajini : வேட்டையன் & தலைவர் 171 அப்டேட்ஸ் ரெடி... ஏப்ரல் மாதம் ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்

First Published Mar 28, 2024, 3:03 PM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் உள்ள வேட்டையன் மற்றும் தலைவர் 171 திரைப்படங்களின் அப்டேட்டுகள் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதனை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினி உடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வேட்டையன் பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த நிலையில், வேட்டையன் பட அப்டேட் விரைவில் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வேட்டையன் படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அந்த டீசருடன் வேட்டையன் பட ரிலீஸ் தேதியும் வெளிவர வாய்ப்புள்ளது. அப்படத்தை ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... Kishen Das : ‘முதல் நீ முடிவும் நீ’ பட ஹீரோவுக்கு நிச்சயதார்த்தம்.. தோழியை காதலித்து கரம்பிடிக்கும் கிஷன் தாஸ்

அதேபோல் ரஜினியின் கைவசம் உள்ள மற்றுமொரு படம் தலைவர் 171. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றும் இணையத்தில் கசிந்துள்ளது.

thalaivar 171

அதன்படி தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் பட அப்டேட் வெளியான போது நெல்சனும் ரஜினி, அனிருத் ஆகியோர் அடங்கிய டீசர் வந்ததுபோல் ரஜினியும் லோகேஷும் தலைவர் 171 டைட்டில் டீசரில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டைட்டில் டீசர் வெளியானதும் மே மாதம் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... Arthika About Adjustment: பணத்துக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் பெண்கள்! 'கார்த்திகை தீபம்' அர்த்திகா ஷாக் தகவல்

click me!