ராஜஸ்தானுக்கு பாதகமான எலிமினேட்டர் – 3 முறை விளையாடி ஒரு வெற்றி, அகமதாபாத்தில் யாருக்கு வெற்றி?

First Published May 22, 2024, 3:21 PM IST

ஐபிஎல் 2024 தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டியில் 2ஆவது முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில், முதல் தகுதிச் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கேகேஆர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

முதல் தகுதிச் சுற்று போட்டியைத் தொடர்ந்து இன்று 2ஆவது தகுதிச் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றிருக்கிறது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் 3 முறை எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ஒரு முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரே ஒரு முறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

2013 ஐபிஎல் எலிமினேட்டர்: - வெற்றி

கடந்த 2013, 2015, 2018, 2022 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் சுற்று போட்டிக்கு சென்றது. 2013 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடியது. இதில், வெற்றி பெற்று 2ஆவது தகுதிச் சுற்று போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் சென்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

2015 ஐபிஎல் எலிமினேட்டர்: - தோல்வி

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

2018 ஐபிஎல் எலிமினேட்டர்: - தோல்வி

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், கேகேஆர் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் 144 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

2022 ஐபிஎல் முதல் தகுதிச் சுற்று போட்டி – தோல்வி

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் முதல் தகுதிச் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்து 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் விளையாடியது. இதில், வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு சென்றது. இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

2024 ஐபிஎல் எலிமினேட்டர் – 2ஆவது முறை:

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில், 2ஆவது பேட்டிங் செய்யும் அணியே அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

ஆர்சிபி கடைசியாக விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்று கம்பீர தோரணையுடன் இன்றைய எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடுகிறது. ஆனால், ராஜஸ்தான் வரிசையாக 4 தோல்வி, ஒரு போட்டி ரத்து என்ற நிலையுடன் இன்றைய எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடுகிறது.

Latest Videos

click me!