Ragi Benefits : காலை உணவாக ராகியை சாப்பிடுங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!!

First Published Apr 2, 2024, 2:01 PM IST

ராகியை காலை உணவில் சேர்ந்து கொண்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

நமது அன்றாட உணவில் காலை உணவு மிகவும் முக்கியமானது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாக இருக்க காலை உண
வில் நாம் எடுக்கும் உணவைப் பொறுத்தது. அதனால்தான் மதிய உணவு, இரவு உணவை தவிர்த்தாலும் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதுதவிர.. காலை உணவை அதிகமாகவும், மதியம் கொஞ்சம் குறைவு.. இரவில் லேசாக சாப்பிடுங்கள். அப்போது ஆரோக்கியம் நம் சொந்தமாகிறது.

இப்போது விஷயத்துக்கு வருவோம்... கேழ்வரகை காலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்... கேழ்வரகு பற்றி தெரியாதவர்களே இல்லை. இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை நாம் பல வழிகளிலும் சாப்பிடலா.. ராகி இட்லி, ராகி தோசை, ராகி உப்புமா, ராகி கூழ் எப்படி இதை சாப்பிட்டாலும் இது நம் ஆரோக்கியத்திற்கு நல்லதுதான்.

ராகியில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது. இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. மேலும்.. இதயம் தொடர்பான பிரச்சனைகளும் தடுக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகு சாப்பிடலாமா..?

இந்த காலகட்டத்தில் பலர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் தினமும் காலை உணவில் ராகி மாவில் செய்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து குறைபாடு குறையும். அதுமட்டுமின்றி.. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், காலை உணவில் ஒரு டம்ளர் ராகி கூழ் குடித்தால், வயிறும் நிரம்பும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இது எடையை எளிதில் குறைக்கவும் உதவுகிறது.

இதையும் படிங்க:  அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய ஸ்னாக்ஸ் "கேழ்வரகு தட்டை"

இவர்கள் மட்டுமல்ல... சர்க்கரை நோயாளிகளும் கூட.. சந்தேகமே இல்லாமல்.. ராகி கூழ், ராகி இட்லிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உங்களுக்கு தெரியுமா.. எலும்புகளை வலிமையாக்குவதில் ராகி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள்.. ராகியை கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!