Jigarthanda OTT: தீபாவளி சரவெடியாக வெளியான... 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

First Published Dec 1, 2023, 10:59 PM IST

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'ஜிகர்தண்டா 2' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Karthik Subbarajs Jigarthanda DoubleX ott release date announcement

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், நடன இயக்குநர், இயக்குனர் என பன்முக திறமையாளராக இருக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியான திரைப்படம் 'ஜிகர்தண்டா டபிள் எக்ஸ்'. 

jigarthanda Double X

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியான, சந்திரமுகி 2 மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. முதல் பாகத்துடன் இப்படத்தை  ஒப்பிட்டு, ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Eviction: போட்ட பிளான் சொதப்பிடுச்சு! இந்த வாரம் பிக்பாசில் இருந்து நடையை கட்டும் போட்டியாளர் இவரா?
 

Jigarthanda

இதை தொடர்ந்து,  கடந்த 2014 ஆம் ஆண்டு, இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் - பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வந்தார். இதுவரை நடித்த படங்களை விடவழக்கத்திற்கு மாறாக தன் தோற்றம் மேனரிசம் முதல் அனைத்தையும் மாற்றி,  வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார்.  அதே போல் எஸ்.ஜே.சூர்யாவும் தன்னுடைய வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
 

குறைந்த அளவிலான திரையரங்குகளில் மட்டுமே வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து... தீபாவளிக்கு திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த லியோ படத்தை தூக்கிவிட்டு இப்படத்தை திரையிட்டனர். சுமார் 70 கோடி வரை இப்படம் கல்லாகட்டியதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

Trisha: பயந்துவிட்டாரா? புரிந்து கொண்டாரா... மன்சூர் அலிகான் சர்ச்சையில்.. அந்தர் பல்டி அடித்த த்ரிஷா!
 

அதன்படி இப்படம் டிசம்பர் 8-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், திரையரங்கில் பார்க்க மிஸ் செய்த பல ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!