Raayan Second Single: ராயன் படத்தில் இருந்து நாளை வெளியாகும் 'வாட்டர் பாக்கெட்' செகண்ட் சிங்கிள் லிரிகள் பாடல்

First Published May 23, 2024, 9:05 PM IST

நடிகர் தனுஷின் 50-ஆவது படமாக, இயக்கி நடித்திருக்கும், 'ராயன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

Director Dhanush starrer Raayan film update out

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் தனுஷ், தன்னுடைய 50-வது படமாக உருவாகும் 'ராயன்' படத்தை, அவரே இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திரான கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார். மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகும்  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Raayan movie cost

இந்த படத்தில் தனுஷை தவிர, நடிகர் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷரா விஜயன், அனிகா சுரேந்திரன், பிரகாஷ் ராஜ், பருத்தி வீரன் சரவணன், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வடசென்னை மையமாக பகுதியை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகி உள்ளது.

15 வயதில் ஹீரோயின்... முன்னணி தமிழ் ஹீரோவை காதலித்து 2 மாதத்தில் கழட்டி விட்ட... விஜய் பட ஹீரோயினா இது?

raayan first single out

ஜூன் 13-ஆம் தேதி இப்படம் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் மற்றும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான, அடங்காத அசுரன் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை தனுஷே எழுதி, ஏ.ஆர். ரகுமானுடன் சேர்ந்து அவர் இசையில் பாடி இருந்தார்.

இப்படத்தின் பாடலே படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், தற்போது 'ராயன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி வாட்டர் பாக்கெட் என தொடங்கும் இந்த லிரிக்கல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளியின் ரொமான்டிக் பாடல் என்பது போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. இந்த தகவலை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

19 வருட திருமண வாழ்க்கையில்... ஒரு நாள் கூட சண்டை இல்லாமல் இல்லை! கணவர் பற்றி தனுஷின் சகோதரி போட்ட பதிவு!
 

Latest Videos

click me!