Narendra Modi: G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி வந்தடைந்தார்...உற்சாக வரவேற்பு...

First Published Jun 26, 2022, 12:44 PM IST

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் அழைப்பின் பேரில்  ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக ஜெர்மனி வந்தடைந்தார். இதையடுத்து மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

G7 -Narendra Modi

உலகளாவிய பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பிற ஜனநாயக நாடுகளையும் ஜி 7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜெர்மணி அழைப்பு விடுத்துள்ளது.
 

G7 -Narendra Modi

இதனையேற்று , பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜூன் 26 (இன்றும்) -27 ( நாளையும்) தேதிகளில் ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகருக்கு ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது. 

 மேலும் படிக்க...திரிபுரா சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக முன்னிலை..! பஞ்சாப் மக்களைவை தேர்தலில் ஷிரோமனி அகாலிதளம் முன்னிலை

G7 -Narendra Modi

மேலும், இந்த இரண்டு நாள் சுற்றி பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பும்  வழியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் ஜூன் 28ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.  இதைத் தொடர்ந்து புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஷேக் முகம்மது பின் சையத் அல் நயனை சந்தித்து வாழ்த்து கூறுகிறார்.

G7 -Narendra Modi

இரண்டு நாட்கள் நடக்கும் 48வது ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

 மேலும் படிக்க...திரிபுரா சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக முன்னிலை..! பஞ்சாப் மக்களைவை தேர்தலில் ஷிரோமனி அகாலிதளம் முன்னிலை

G7 -Narendra Modi

மேலும், இந்த G7 நாடுகள், மாநாட்டில் சுற்றுச்சூழல், ஆற்றல், காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற  பிரச்சினைகள் குறித்து பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!