பொங்கல் ரேஸில் தனுஷை மிஞ்சிய சிவகார்த்திகேயன்... அயலானை விட கம்மி ரேட்டுக்கு விலைபோன கேப்டன் மில்லர்..?

First Published Jan 5, 2024, 3:26 PM IST

பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்களின் பிசினஸ் விவரம் வெளியாகி உள்ளது.

Dhanush, sivakarthikeyan

பொங்கல் பண்டிகைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண்விஜய் நடித்த மிஷன் மற்றும் விஜய் சேதுபதியின் பான் இந்தியா படமான மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடிக்கப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

ayalaan

இந்த நிலையில், பொங்கல் ரேஸில் மோதும் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களின் பிசினஸ் நிலவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை மட்டும் ரூ.40 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் கெரியரில் அதிகபட்ச தொகைக்கு விற்பனையான படமாக அயலான் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Sobhita Dhulipala: சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் காதலா? உண்மையை ஓப்பனாக கூறிய சோபிதா துலிபாலா!

captain miller

மறுபுறம் இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ள தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை ரூ.30 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் கெரியரில் இதுவரை வெளியான படங்களில் இந்த படம் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். இருந்தாலும் அயலான் படத்தை காட்டிலும் கேப்டன் மில்லர் திரைப்படம் கம்மியான தொகைக்கே பிசினஸ் ஆகி இருக்கிறது.

pongal release movies

அயலான் படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் யோகிபாபு, ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். அதேபோல் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த இரு படங்களுமே ஜனவரி 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... ஷண்முகம் வரலேன்னா ரத்னா கழுத்துல தாலி கட்டிருவேன்; அதிர்ச்சி கொடுக்கும் முத்துப்பாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்

click me!