Parenting Tips : உங்கள் குழந்தைக்கு அடிக்கடி சிப்ஸ் வாங்கி கொடுக்கிறீர்களா..? அப்ப அவசியம் 'இத' தெரிஞ்சிகோங்க!

First Published Mar 25, 2024, 8:05 PM IST

நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிப்ஸ் வாங்கி கொடுக்கும் முன் சில விஷயங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்..
 

சிப்ஸை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை என்றே சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை என்ற பாகுபாடின்றி அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வெவ்வேறு விதமான சுவையிலும், கண்களை கவரும் விதமாக அதன் வடிவமும்  இருக்கும். இதனால் தான் என்னமோ குழந்தைகள் சிப்ஸை ரொம்பவே விரும்பி சாப்பிடுகிறார்கள்.

ஆனால், இவற்றை உங்கள் குழந்தைக்கு வாங்கி கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசிக்க வேண்டும். காரணம் இவற்றின் பக்க விளைவுகள் தான். இப்போது, குழந்தைகள் சிப்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்று பார்ப்போம்.

பொதுவாகவே, சிப்ஸ் கெட்டுப்போகாமல், பிரஷ்ஷாக இருக்க அதில் சோடியம் சேர்க்கப்படுகிறது. ஆனால், சோடியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை படிப்படியாக பாதிக்கிறது. 

சிப்ஸில் உள்ள டிரான்ஸ் ஃபேட் கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதனால் தமனிகளில் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதன் காரணமாக, குழந்தைகளுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம். அதுமட்டுமின்றி, சிப்ஸ் உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் உடல் எடை கூடும். குறிப்பாக குழந்தைகள் சிப்ஸ் சாப்பிடுவதால் மோசமான உடல் பருமனை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: Parenting Tips : பெற்றோர்களே! குழந்தைக்கு எந்த வைட்டமின் குறைபாட்டால் என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

அதுபோல் சிப்ஸில் கலோரிகள் அதிகம் உள்ளது. எனவே, இதை குழந்தைகள் சாப்பிட்டால் உடல் எடை ஒரேயடியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு இதனால் மலச்சிக்கல் பிரச்சினைகளை உண்டாக்குவது மட்டுமன்றி, இன்னும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:  Parenting Tips : பெற்றோர்களே... உங்கள் குழந்தை ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்த சூப்பரான ஐடியாக்கள் இதோ!!

முக்கியமாக, குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சிப்ஸ் சாப்பிட்டால்  புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், இது குழந்தையின்மைக்கு வழிவகுக்குமாம். அதுபோல இது குழந்தைகளுக்கு வாயு மற்றும் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்குமாம். எனவே, நீங்கள் உங்கள் குழந்தைக்கு இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை கொடுப்பதைத் தவிர்த்து ஆரோக்கியமுள்ளதை வாங்கி கொடுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!