Parenting Tips : பெற்றோர்களே..10 வயசுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 'இந்த' மாதிரி உணவுகளை கொடுக்காதீங்க!

First Published Mar 18, 2024, 2:13 PM IST

பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் அவை வளரும் குழந்தைகளின் வளர்ச்சியைத் தடுக்குமாம்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் உணவில் மிகவும் கவனமாக செலுத்துவார்கள். இருப்பினும், சில உணவுகள் ஆபத்தானவை என்று தெரியாமல் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுகின்றன. பொதுவாகவே, குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன பிறகு, உணவுகளை
மெதுவாக கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். அதுவும் வயதுக்கு ஏற்ப உணவுகளை படிப்படியாக கொடுக்க ஆரம்பியுங்கள். இருப்பினும், குழந்தைக்கு பத்து வயது ஆகும் வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை மட்டும் கொடுக்காதீர்கள். அவை குழந்தைகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை..
 

பதப்படுத்தப்பட்ட இறைச்சி:  பதப்படுத்தப்பட்ட இறைச்சி கெட்டு போகாமல் நீண்ட நாள் இருக்க அதில் சில இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக இதில் அதிகளவு உப்பு சேர்க்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு சிறுநீரகங்கள் பிரச்சினைகள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, இது அவர்களுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும்.

செயற்கை இனிப்புகள் உணவுகள்: அஸ்பார்டேம் மற்றும் சுக்ரோலோஸ் போன்ற செயற்கை இனிப்புகள் நாவுக்கு இனிமையாக இருந்தாலும், அவை ஆரோக்கியமற்றவை. அவை அனைத்தும் இரசாயனங்களால் ஆனது. இந்தமாதிரியான உணவுகள் கடைகளில் அதிகம் விற்க்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல..இது குழந்தைகள் விரும்பும் ஜெலட்டின், ஐஸ்கிரீம்கள் மற்றும் மிட்டாய்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவுகளை உட்கொள்வது குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மோசமாக்கும்.

இதையும் படிங்க: உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கிறார்கள் என்று கவலையா..? இந்த சூப்பர்ஃபுட்களைக் கொடுங்க...

சோடா: இதை குடித்தால் நீரழிவு மட்டுமின்றி சர்க்கரை நோய் தொடர்பான நோய்களும் ஏற்படும். அதுமட்டுமின்றி, சோடா பல் எனாமலை அரித்து, பல் சிதைப்பை எளிதாக்குகிறது. மேலும், இந்த பானங்கள் குழந்தைகளின் குடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

இதையும் படிங்க: உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கொடுங்கள்..

டின் உணவுகள்: உப்பு ஊறவைத்த மீன், ஊறுகாய், காய்கறிகள் போன்ற உணவுகள் டின்களில் அடைக்கப்படுகிறது. இந்த உணவுகளில் அதிக அளவு ரசாயனங்கள் மற்றும் உப்பு கலக்கப்படுகிறது. இந்த உணவுகள் மெதுவாக உணவு விஷத்திற்கு சமம். இந்த உணவுகள் உப்பு நிறைந்துள்ளதால், அவற்றின் அசல் ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன. எனவே, இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!