Parenting Tips : உங்கள் குழந்தையிடம் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா...? நிறுத்த சூப்பரான வழிகள் இதோ!!

First Published Mar 23, 2024, 7:36 PM IST

உங்கள் குழந்தைகள் நகத்தை கடிக்கிறார்கள் என்றால் உடனே இந்த விஷயங்களைச் செய்யுங்கள். அவர்கள் நகத்தைக் கடிக்கவே மாட்டார்கள். 

பொதுவாக நகத்தை கடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. மன அழுத்தம் அல்லது சலிப்பு போன்ற சமங்களில் அப்படி செய்வோம்.
ஆனால் இது தவறு. அதிலும் குறிப்பாக இந்த பழக்கம் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் இருக்கும்.எவ்வளவு அடித்தாலும், திட்டினாலும் இந்தப் பழக்கத்தை அவர்கள் விட மாட்டார்கள்.

குழந்தைகள் நகத்தைக் கடிக்கும் போது அதிலிருக்கும் அழுக்கு வயிற்றுக்குள் சென்று பல நோய்களை உண்டாக்குவதால் பெற்றோர்
கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளிடமிருந்து இந்த பழக்கத்தை தவிர்க்க அவர்களை அடிப்பது, திட்டுவது போன்ற செயல்களை செய்யாமல் சில விஷயங்களை மட்டும் செய்தால் போது. அது என்ன என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.

பரிசு கொடுங்கள்: உங்கள் குழந்தை நகம் கடிக்காமல் இருக்க அவர்களை திசை திருப்புங்கள். உதாரணமாக, நீண்ட நேரம் நகங்களைக் கடிக்காமல் இருந்தால், பரிசு தருவதாகச் சொல்லுங்கள். குழந்தைகள் பரிசுகளை விரும்புகிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி தருவதாகச் சொல்லி கூட இந்த பழக்கத்தில் இருந்து விலக்கி வைக்கலாம். 

இதையும் படிங்க:  Nails Biting : நீங்கள் அடிக்கடி நகம் கடிப்பீர்களா? இது ஆபத்தான பழக்கம்...ஜாக்கிரதை..!!

அன்பாய் சொல்லுங்கள்: குழந்தைகள் நகங்களைக் கடிப்பதைப் பார்க்கும் போது தாய்மார்களுக்கு அடக்க முடியாத கோபம் வரும். எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை என்று பலர் புழம்புகிறார்கள். எனவே, நீங்கள் கோபத்திற்கு பதிலாக அன்பாய் சொல்லுங்கள். அப்படி செய்வது தவறு என்று அவர்களுக்கு புரியவையுங்கள். இப்படி சொன்னால் அவர்கள் கேட்ட வாய்ப்பு அதிகம்.

இதையும் படிங்க:  உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படின்னா நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கீங்க…

நெயில் பாலிஷ் போட்டுவிடுங்கள்: குழந்தைகளின் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டால் அவர்கள் நகங்களைக் கடிக்காமல் இருப்பார்கள். அதையும் மீறி அவர்கள் கடித்தால் நெயில் பாலிஷ் வயிற்றுக்குள் சென்றால் பிரச்னை ஏற்படும் என்று அவர்களை எச்சரிக்கலாம். இப்படி செய்தால் கண்டிப்பாக அவர்கள் நகங்களைக் கடிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!