நானும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன்! வெங்கடேஷ் பட்-ஐ தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்த மற்றுமொரு பிரபலம்

First Published Feb 25, 2024, 8:29 AM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இருந்து தான் விலகுவதாக வெங்கடேஷ் பட் அறிவித்த நிலையில், தற்போது மற்றுமொரு பிரபலமும் அதில் இருந்து விலகி இருக்கிறார்.

Venkatesh Bhatt, Manimegalai, Chef damu

விஜய் டிவியில் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோக்களுள் ஒன்று தான் குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை  வெற்றிகரமாக 4 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் ஜெயித்தார். இதையடுத்து இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும், கடைசியாக நடந்து முடிந்த நான்காவது சீசனில் மைம் கோபியும் டைட்டில் வின்னர்கள் ஆகினர்.

cook with comali

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சிறப்பே இது குக்கிங் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் உள்ள காமெடி கலாட்டா தான். சமையல் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவருடன் சேர்ந்து சமைத்து போட்டியாளர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதே இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம். குறிப்பாக கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு இந்நிகழ்ச்சி மிகப்பெரிய ஸ்டிரெஸ் பஸ்டராக இருந்தது. அந்த அளவுக்கு மக்களின் அபிமான ஷோவாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... தனுஷ் இயக்கத்தில் ராயன்.. அசத்தலான நடிகை குறித்து வெளியான அப்டேட் - படத்தில் அவர் கேரக்டர் என்ன தெரியுமா?

cook with comali Judges

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கிய காரணம் அதன் நடுவர்கள் என்றே சொல்லலாம். செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் தான் இதுவரை நடந்து முடிந்த நான்கு சீசன்களிலும் நடுவர்களாக இருந்தனர். அவர்கள் போட்டியாளர்களுடன் சேர்ந்து செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. அதோடு உணவை சுவைத்து அதில் உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டி போட்டியாளர்களை அவர்கள் மெருகேற்றும் விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

Venkatesh bhatt quit cook with comali

இதனிடையே, விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தான் அதில் நடுவராக பங்கேற்க மாட்டேன் என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் வெங்கடேஷ் பட். அவரைத் தொடர்ந்து தற்போது செஃப் தாமுவும் தான் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரு தூண்களாக இருந்த இருவரும் அடுத்தடுத்து விலகி உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Chef Damu quit cook with comali

அதே வேளையில், தாங்கள் விலகினாலும் மற்றுமொரு நிகழ்ச்சியில் இணைய உள்ளதாகவும், அது ஒரு புதுவிதமான நிகழ்ச்சி எனவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இருவரும் அறிவித்துள்ளனர். இதனால் மற்றுமொரு குக்கிங் நிகழ்ச்சி விரைவில் வரப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அது விஜய் டிவியிலா அல்லது வேறு ஏதேனும் சேனலிலா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... சிக்கென்ற ஆடை.. தாஜ்மஹால் முன் அசத்தலாக யோகாசனம் - ரசிகர்களை பிரம்மிக்க வைத்த அதுல்யா ரவி!

click me!