வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததா? பொங்கலுக்கு மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

First Published Jan 10, 2024, 12:53 PM IST

இந்த ஆண்டு தமிழகத்தையே மிரட்டிய வடகிழக்கு பருவமழை சீசன் முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

Northeast Monsoon

எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொதுமக்களை மிரட்டியது. மிக்ஜாம் புயலால் வட தமிழகமும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகமான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை வெளுத்து வாங்கியது. 

Tamilnadu Rain

இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய  பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை ,நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இதையும் படிங்க;- Orange Alert : தென் மாவட்டங்களை மீண்டும் புரட்டிப்போடும் மிக கன மழை .. வானிலை மையம் எச்சரிக்கை

Chennai Rain

அதேபோல், 11ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொங்கல் தினத்தன்று வறண்ட வானிலையே நிலவுவதாக வானிலை மையம் கூறியிருந்தது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க;-  அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் திடீர் ராஜினாமா..! என்ன காரணம் தெரியுமா? அவரே சொன்ன தகவல்.!

Tamilnadu weatherman

இந்நிலையில் பொங்கல் அன்று மழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- தென் தமிழகத்தில் இன்று முதல் நாளை வரை லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல் வடகிழக்கு பருவமழை சீசன் முடிவுக்கு வந்துள்ளது. பொங்கல் விடுமுறையின் போது குளிர்காலம் வேகம் எடுக்கும். உயர் அழுத்தப் பகுதி விஷயங்களைக் கட்டுப்படுத்தி குளிர் காலம் தொடங்கும். அதேபோல் தற்போது உள்ள சூழ்நிலை மலை வாசஸ்தலங்களுக்குச் செல்வதற்கு ஏற்றதாக அமைகிறது என தெரிவித்துள்ளார்.

click me!