விலங்குகள் நல வாரியத்தின் Cow Hug Day... மீம்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!!

First Published Feb 9, 2023, 6:51 PM IST

விலங்குகள் நல வாரியத்தின் Cow Hug Day அறிவிப்பை அடுத்து நெட்டிசன்கள் இணையத்தை மீம்ஸ்களால் நிரப்பி வருகின்றனர். பலர் டிவிட்டரில் Cow Hug Day குறித்த பல்வேறு படங்களை பகிர்ந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். காதலர் தினத்தின் வாரமே காதலர் வாரமாக காதல் ஜோடிகள் கொண்டாடுவர். இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி எதிர்வரும் பிப்.14 காதலர் தினத்தை முன்னிட்டு பசு மாடுகளை கட்டிப் பிடிக்குமாறு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அன்றைய தினம் உலகம் முழுவதும் ஒருவருக்கு ஒருவர் தங்களது அன்பை பகிர்ந்து கொண்டாடும் சூழலில் இதைச் செய்யுமாறு அந்த வாரியம் அறிவிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனை Cow Hug Day எனவும் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. 

விலங்குகள் நல வாரியத்தின் இந்த அறிவிப்பை அடுத்து நெட்டிசன்கள் இணையத்தை மீம்ஸ்களால் நிரப்பி வருகின்றனர். பலர் டிவிட்டரில் Cow Hug Day குறித்த பல்வேறு படங்களை பகிர்ந்துள்ளனர்.மற்றொருவர் Cow Hug Day அன்று தலைதெறிக்க ஓடும் மாட்டின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அவற்றில் சிலவற்றை கீழே காணலாம். தன்னை கட்டிப்பிடிக்க யாரும் இல்லாத மாடு கடற்கரையில் சோகமாக நிற்பது போன்ற படத்தை ஒருவர் பகிருந்துள்ளார்.

மற்றொருவர் Cow Hug Day அன்று மாட்டை கட்டிபிடிக்க சென்றால் என்னவாகும் என்பது குறித்து திரைப்பட காட்சியை பகிர்ந்துள்ளார்.

ஒருவர் மாட்டின் மாஸ்க் அணிந்திருப்பது போன்ற படத்தை பகிர்ந்து இதுதான் Cow Hug Day-க்கான சிறந்த உடை என்றும் அந்த உடை அணிவதால் நிறைய ஹக் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். 

மற்றொருவர் மாட்டை கட்டிப்பிடிக்க செல்லும் போது மாடு அந்த நபரை சாணத்தால் மூடுவதை போன்று படத்தை பகிர்ந்துள்ளார். 

click me!