Trisha: நயன்தாரா ரூட் கிளியர்...அடுத்து த்ரிஷா திருமணம் எப்போது..? இணையத்தில் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..

First Published Jun 15, 2022, 11:28 AM IST

Trisha Wedding: லேடி சூப்பர் ஸ்டார் இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைத்த நிலையில், தற்போது 40 வயதை தொட்டும் இளமை ததும்பும் த்ரிஷா, நயனை காட்டிலும் ஒன்றை வயது மூத்தவர். அவருக்கு திருமணம் எப்போது என்று நெட்டிசன்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நயன்தாரா தன்னை விட வயதில் சிறியவரான விக்னேஷ் சிவனை, கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம்  செய்துகொண்டனர். கடந்த 7 வருடமாக காதலித்து வந்தவர்கள் தற்போது கணவன்- மனைவியாக இணைத்துள்ளனர்.  இவர்களது திருமணத்தில்  ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது, நடிகை நயன்தாரா, தற்போது கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு விருந்துக்காக சென்றுள்ளார். அங்கு இரண்டு வாரம் தங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, புது மண தம்பதிகளாக நயன்தாராவின் திருமணம் பற்றிய தகவல்களை ரசிகர்கள் அதிகம் தேடி வருகிறார்கள்.சமூக வலைத்தளம் முழுவதும் எங்கு சென்று பார்த்தாலும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் பேச்சுக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. அவரின் தற்போதைய புகைப்படங்கள், விடீயோக்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றனர். தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நயன்தார திருமணத்தை தொடர்ந்து, 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு என பிஸியான இருக்கும் அவரது சமகால நடிகை த்ரிஷாவுக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது 40 வயதை தொட்டும் இளமை ததும்பும் த்ரிஷா, நயனை காட்டிலும் ஒன்றை வயது மூத்தவர் ஆவார். மேலும், கடந்த 2015இல் தொழிலதிபர் வருணுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், சில மாதங்களிலே இருவரும் தங்களது உறவை முறித்துக்கொண்டது குறிப்பிடக்கத்தக்கது. 


 மேலும் படிக்க...Nayan: விக்னேஷ் சிவனை விட நயன்தாரா மூத்தவர் தான்..ஆனால், எத்தனை வயது? கூகுளில் தேடி பார்க்கும் நெட்டிசன்கள்...

click me!