நெடுஞ்சாலைகளில் அரளிச்செடிகள் வளர்ப்பது ஏன் தெரியுமா? இந்த காரணம் உங்களுக்கு தெரியுமா?

First Published Apr 22, 2024, 8:42 PM IST

நம் தேசிய நெடுஞ்சாலைகளில் அரளிச்செடிகள் வளர்வதை பார்த்திருப்பீர்கள். அது ஏன் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

Nerium Plant In Highway

இந்திய மொழிகளில் கனீர் என்று அழைக்கப்படும் நெரியம் ஒலியாண்டர், மனிதர்களுக்கு மிகவும் நச்சுத்தன்மையுள்ள தாவரமாகும். மேலும் இது தோட்ட செடியாக இருந்தாலும், இது பின்வரும் காரணங்களுக்காக நெடுஞ்சாலைகளில் நடப்படுகிறது.

Nerium Plant

பாதை மற்றும் எதிர் பாதையை மறைக்கும் அளவுக்கு பிரமாண்டமாக வளர்வது இல்லை. இதன் மூலம் மலரும் வண்ணமயமான பூக்கள் சாலையின் அழகைக் கூட்டுகின்றது என்று கூறலாம்.இந்த செடியானது வேகமாக வளரும் மற்றும் பராமரிப்பு செலவு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

Center Median

மண் அரிப்பை கட்டுப்படுத்துவதிலும், இரைச்சல் மாசுவை கட்டுப்படுத்துவதிலும் இந்த செடி முக்கியப்பங்கு வகிக்கிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் இருந்து கார்பன் நச்சுக்கழிவு அதிகளவு வெளியேறும்.

National Highway

இந்த நச்சுக்கழிவை காற்றில் உறிஞ்சி தூய ஆக்சிஜனாக மாற்றித்தரும் பண்பு தாவரங்களுக்கு உண்டு. இந்த செவ்வரளி செடி காற்றில் உள்ள கார்பன் கழிவை எளிதில் உள்வாங்கும்.

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!