தமிழில் திரிஷா ராஜ்ஜியம்.. சைலண்டாக மலையாளம் பக்கம் ஒதுங்கிய நயன் - லேடி சூப்பர்ஸ்டாரின் அடுத்த பட அப்டேட் இதோ

First Published Apr 14, 2024, 2:26 PM IST

நடிகை நயன்தாராவுக்கு தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

Trisha, Nayanthara

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அவர் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன படங்களில் ஜவான் மட்டும் தான் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் நயன். ஜவான் படத்துக்கு பின்னர் அவருக்கு கோலிவுட்டில் பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லை. இதற்கு காரணம் அவர் நடிப்பில் தமிழில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன இறைவன், அன்னபூரணி ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

Trisha vs Nayanthara

தற்போது புதுமுக இயக்குனர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மட்டுமே நயன் கைவசம் உள்ளது. வழக்கமாக பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டுவார். ஆனால் கோலிவுட்டில் தற்போது திரிஷா தான் டிரெண்டிங் ஹீரோயினாக இருப்பதால், பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் திரிஷா வசம் சென்றுவிட்டன. அவர் கைவசம் தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைஃப் போன்ற பிரம்மாண்ட படங்கள் உள்ளன. இதுதவிர மேலும் சில படங்கள் திரிஷாவின் லைன் அப்பில் உள்ளன.

இதையும் படியுங்கள்... Benz : லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படம்.. அதிரடியாக நீக்கப்பட்ட ரத்னகுமார்! அவருக்கு பதில் இவரா?

Nayanthara

இப்படி கோலிவுட்டில் திரிஷா கோலாச்சி வருவதால், சைலண்டாக மலையாள திரையுலகம் பக்கம் ஒதுங்கி இருக்கிறார் நயன்தாரா. அங்கு அவர் நடிப்பில் கடைசியாக கோல்டு திரைப்படம் வந்தது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் அட்டர் பிளாப் ஆனதால் கடந்த ஓராண்டாக மலையாள சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த நயன்தாரா, தற்போது முன்னணி நடிகரின் பட வாய்ப்பை தட்டி தூக்கி உள்ளார்.

Nayanthara New Movie Dear Students

அதன்படி மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் டியர் ஸ்டூடண்ட்ஸ் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் நயன்தாரா. இப்படத்தை ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர். தமிழ் புத்தாண்டு தினமான இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். நடிகை நயன்தாராவும், நடிகர் நிவின் பாலியும் கடைசியாக லவ் ஆக்‌ஷன் ட்ராமா என்கிற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Box Office : ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை மூன்றே நாளில் தட்டிதூக்கிய ஆவேஷம் மற்றும் வர்ஷங்களுக்கு சேஷம்

click me!