சின்ன வயசுல எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்க... நயன்தாராவின் அன்சீன் போட்டோவுக்கு கிடைத்த அடிபொலி ரெஸ்பான்ஸ்

First Published Apr 3, 2024, 4:58 PM IST

நடிகை நயன்தாரா குழந்தை பருவத்தில் தன்னுடைய தந்தையுடன் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

nayanthara

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் நடிகை நயன்தாரா தற்போது சம்பளத்தையும் உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.

நடிகை நயன்தாராவுக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் ஆனது. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்துகொண்ட நயன்தாராவுக்கு உயிர், உலக் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்டார் நடிகை நயன்தாரா.

பொதுவாக சோசியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த நயன்தாரா, கடந்த ஆண்டு தான் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் நுழைந்தார். அவர் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கி இன்னும் ஓராண்டு கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் நடிகை நயன்தாராவுக்கு 80 லட்சம் பாலோவர்கள் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Anna serial : அண்ணா சீரியல் : பாண்டியம்மாவை வீட்டை விட்டு துரத்த பரணி போடும் பலே பிளான்.. ஒர்க் அவுட் ஆகுமா?

இன்ஸ்டாகிராமில் தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் தனது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா. இன்று தன்னுடைய தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேரளாவுக்கு சென்றபோது அங்கு தன்னுடைய உறவினர்களுடன் எடுத்த போட்டோஸை பதிவிட்டுள்ளார்.

Nayanthara Childhood Photo

அதுமட்டுமின்றி தன் தந்தையுடன் தான் சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நயன். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாரா செம்ம கியூட்டாக இருப்பதாக வர்ணித்து வருகின்றனர். ஒருசிலரோ அவரது மகன் உலக் போன்று இருப்பதாக ஒப்பிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 27 வளர்ப்பு பசங்க.. 24 மணி நேரமும் யார் வந்தாலும் சாப்பாடு.. ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்..

click me!