கோடிகளில் சம்பளம்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு.. டாப் 10 தென்னிந்திய பணக்கார நடிகைகள் லிஸ்ட்..

First Published Mar 7, 2024, 3:25 PM IST

டாப் 10 பணக்கார தென்னிந்திய நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திரையுலகில் ஹீரோக்கள் அளவுக்கு ஹீரோயின்கள் அதிக காலம் நிலைப்பதில்லை. திருமணம், வயது, அழகு உள்ளிட்ட பல காரணங்களால் நடிகைகள் ஃபீல்டு அவுட் ஆகிவிடுவார்கள்.. அல்லது அக்கா, அம்மா போன்ற துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து ஹீரோனின்களாகவே நடித்து வருகின்றனர். த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகளை உதாரணமாக சொல்லலாம். துணை கேரக்டரில் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர் என்பது தான் சிறப்பு. இதனால் சமீப காலமாக ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் கணிசமான சம்பளம் வாங்குகின்றனர். இதன் மூலம் இந்த டாப் ஹீரோயின்களின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. டாப் 10 பணக்கார தென்னிந்திய நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நயன்தாரா

பணக்கார தென்னிந்திய நடிகை என்றால் அது நயன்தாரா தான். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரு.200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.. அவருக்கு ரூ. 100 கோடி மதிப்புள்ள 4 BHK வீடு உள்ளது, சென்னை தவிர ஹைதராபாத், கேரளா, மும்பை என நாட்டின் முக்கிய நகரங்களில் 4 ஆடம்பர வீடுகளும் நயன்தாராவுக்கு சொந்தமாக உள்ளது. நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

அனுஷ்கா

டாப் 10 பணக்கார தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் நடிகை அனுஷ்கா 2-வது இடத்தில் இருக்கிறார். தமிழ், தெலுங்கில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான அனுஷ்காவின் சொத்து மதிப்பு ரூ.133 கோடியாம். கடைசியாக மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்த அனுஷ்கா தற்போது Kathanar – The Wild Sorcerer  என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்கா ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார்.

தமன்னா

பணக்கார தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருப்பது நடிகை தமன்னா. தமன்னா ஒரு படத்திற்கு ரூ. 1.5 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. காவாளா பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ட்ரெண்டான தமன்னா தற்போது தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி என்று கூறப்படுகிறது.

சமந்தா

தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். சமந்தா ஒரு படத்திற்கு ரூ 3 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. அவர் நடித்த யசோதா, சாகுந்தலம் குஷி படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் சமந்தா நடித்து வருகிறார். நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.90 கோடி என்று கூறப்படுகிறது.

த்ரிஷா

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்து வரும் த்ரிஷா கடைசியாக லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். விடா முயற்சி தவிர, மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக்லைஃப் படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார். த்ரிஷாவும் தற்போது 6 முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. த்ரிஷாவின் சொத்து மதிப்பு ரூ.85 கோடி என்று கூறப்படுகிறது. 

காஜல் அகர்வால்

தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு ரூ 1.5 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இந்தியன் 2 உட்பட. ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு ரூ.83 கோடி என்று கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டே

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். அவர் கடைசியாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். மேலும் "ஹவுஸ்ஃபுல் 4" மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்தார். தற்போது ஹிந்தி படங்களில் பிசியாக இருக்கும் பூஜா ஹெக்டே ஒரு படத்திற்கு ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இவரின் சொத்து மதிப்பு ரூ.51 கோடி என்று கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா

நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா கடைசியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ராஷ்மிகா ஒரு படத்திற்கு ரூ 2 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அவர் தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள்ஃப்ரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ரூ.45 கோடி என்று கூறப்படுகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு படத்திற்கு ரூ 1.5 முதல் 3.5 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் பிசியாக இருந்த ரகுல் தமிழில் கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம் சமீபத்தில் தான் நடைபெற்றது. ரகுலின் சொத்து மதிப்பு ரூ.49 கோடி என்று கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்  ஒரு படத்திற்கு ரூ 1 முதல் 4 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சைரன்படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் , ரிவால்வர் ரீட்டா, ரகு தாதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.41 கோடி என்று கூறப்படுகிறது.

click me!