திருமணமான பின்னர் நடிகைகளுடன் ரகசிய உறவு... கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான சினிமா பிரபலங்கள் - ஒரு பார்வை

First Published Apr 11, 2024, 10:28 AM IST

திருமணத்துக்கு பின்னர் நடிகைகளுடன் ரகசிய உறவில் இருந்து கிசுகிசுவில் சிக்கிய சினிமா பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

நாகார்ஜுனா - தபு (Nagarjuna Tabu)

நடிகர் நாகார்ஜுனா லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நடிகர் நாகார்ஜுனா திருமணத்துக்கு பின்னர் நடிகை தபுவுடன் ரகசிய உறவில் இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. இவர்கள் இருவரும் சுமார் 10 ஆண்டுகள் ரகசிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இருவருமே தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கின்றனர்.

பிரபுதேவா - நயன்தாரா (Prabhu Deva Nayanthara)

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் ரம்லத் என்பவரை கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி கடந்த 2011-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டது. இவர்களின் பிரிவுக்கு நடிகை நயன்தாராவுடனான காதலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. விவாகரத்து செய்யும் முன்னரே நயன்தாராவை காதலித்து வந்தார் பிரபுதேவா. இதனால் கடுப்பான ரம்லத் நயன்தாராவை நேரில் பார்த்தால் மிதிப்பேன் என்று ஆவேசமாக கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... Tillu Square : இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தந்த அனுபமா... தில்லு ஸ்கொயர் படத்துக்கு கோடி கோடியாய் கொட்டும் வசூல்

போனி கபூர் - ஸ்ரீதேவி (Boney Kapoor Sridevi)

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் மோனா கபூர் என்பவரை கடந்த 1983-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் நிறைவுக்கு வந்தது. பின்னர் நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார் போனி கபூர். அவர் தனது முதல் மனைவியை பிரியும் முன்னரே நடிகை ஸ்ரீதேவி உடன் ரகசிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திருமணத்துக்கு முன்னரே நடிகை ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்ததாக அந்த சமயத்தில் கிசுகிசுக்கள் உலா வந்தன.

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Dhanush Aishwarya Rajinikanth)

கோலிவுட்டில் அதிக கிசுகிசுக்களில் சிக்கிய நடிகர்களில் தனுஷும் ஒருவர். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி தற்போது விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஜோடியின் விவாகரத்துக்கு நடிகைகள் உடனான கிசுகிசுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் - ரம்யா கிருஷ்ணன் (kS Ravikumar Ramya Krishnan)

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணனை பற்றியும் கோடம்பாக்கத்தில் ஒரு கிசுகிசு பரவியது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து நடித்து வந்ததால் இவர்கள் இருவருக்கும் இடையே ரகசிய உறவு இருந்ததாக பேச்சு அடிபட்டது. இந்த விஷயம் அவரின் மனைவிக்கு தெரிந்ததால் இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கள் உலா வந்தன.

இதையும் படியுங்கள்... Shabana Quits Mr Manaivi: மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறும் ஷபானா! இது தான் காரணமா?

click me!