கேப்டன் மாற்றம் – தனக்கு தானே ஆப்பு வச்சு மாட்டிக்கிட்ட மும்பை இந்தியன்ஸ் – பலன் பிளே ஆஃப் இல்லை!

First Published May 4, 2024, 12:06 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 51ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

Rohit Sharma

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இது ரோகித் சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, ஹர்திக் பாண்டியா குறித்து விமர்சனம் செய்தனர்.

IPL 2024 Playoffs

இது ஒரு புறம் இருந்தாலும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் அணியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. ஆனால், அந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போன்று அடுத்தடுத்து நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் தோல்வியை தழுவி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

Mumbai Indians

மூன்று போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது. பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் வீழ்த்தியது. அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழத்தி 3ஆவது வெற்றி பெற்றது.

Hardik Pandya, IPL 2024

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோல்வியை தழுவியது. கடைசியாக நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 51ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது.

Rohit Sharma

பின்னர் எளிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சூர்யகுமார் யாதவ் மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து டிம் டேவிட் 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, மும்பை இந்தியன்ஸ் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Mumbai Indians

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்ததன் மூலமாக விளையாடிய 11 போட்டிகளில் 3 வெற்றியும், 8 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. மேலும், இதுவரையில் 6 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட மொத்தமாக 12 புள்ளிகள் பெறும்.

Mumbai Indians IPL Playoffs

அப்படி 12 புள்ளிகள் பெற்றாலும் கூட மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பிற்கு செல்ல முடியாது. ஆனால், எஞ்சிய 3 போட்டிகள் முறையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இதில், 3 போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவு தான். எது எப்படியிருந்தாலும், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

Mumbai Indians

இன்னும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கேப்டன் சுமை காரணமாக ரோகித் சர்மா பேட்டிங் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இப்பொழுது ஹர்திக் பாண்டியா கேப்டனாக பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை. முதல் முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!