வாய் விட்டுட்டாங்க மோடி, அமித்ஷா.. முற்றுகை தான் வழி - அண்ணாமலையால் கதிகலங்கும் காங்கிரஸ்

First Published May 22, 2024, 6:04 PM IST

தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் தமிழக பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Tamil Nadu BJP Vs TN Congress

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறள், இலக்கியம், இலக்கணத்தை பற்றி பேசும் மோடி, பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக, சந்தர்ப்பவாதியாக பேசி வருகிறார்.

Selvaperunthagai

இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பாஜக தமிழகத்தில் இருக்கவே வாய்ப்பு கிடையாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழக மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லாவிட்டால், பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்” என்று கூறினார்.

Annamalai

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

PM Modi

மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.

Amit Shah

எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும்,  முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் அண்ணாமலை.

விமான விபத்துகளில் உயிரிழந்த உலகின் மிக முக்கிய தலைவர்கள்.. யார் யார் தெரியுமா.?

Latest Videos

click me!