விறுவிறுப்பாக உருவாகும் Thug Life.. பொன்னியின் செல்வனில் இருந்து களமிறங்கிய அடுத்த செலிபிரிட்டி - யார் அது?

First Published Jan 11, 2024, 6:23 PM IST

Mani Ratnam Thug Life : பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சுமார் 36 ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் மீண்டும் இணை உள்ள திரைப்படம் தான் Thug Life. ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

Nayagan

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய விக்ரம் திரைப்பட வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் உருவாகி வருகிறது. குறிப்பாக பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் Thug Life என்கின்ற திரைப்படத்தில் "ரங்கராய சக்திவேல் நாயக்கன்" என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த பல முக்கிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றது. 

"சிரிப்பிலே ஸ்கோர் பன்றாரே.. மிரட்டலாக வெளியானது பிரமயுகம் டீசர் - மாறுபட்ட வேடத்தில் வருகின்றார் மம்மூட்டி!

Ponniyin Selvan

இந்நிலையில் கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரு ஆண்டுகளும் தன்னுடைய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை வெளியிட்டு மீண்டும் தன் புகழை நிலைநாட்டினார் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் திரைப்படம் என்பது பல ஆண்டுகளாக பல்வேறு இயக்குனர்களும், முன்னணி நடிகர்களும் எடுக்க முயற்சித்து கைவிட்ட ஒரு விஷயத்தை செய்து காட்டி பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் மணிரத்தினம்.

Thug Life Crew

குறிப்பாக வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கார்த்தி மற்றும் அருண் மொழி வர்மனாக நடித்திருந்த நடிகர் ஜெயம் ரவி ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த சூழ்நிலையில் ஜெயம் ரவி, திரிஷா மற்றும் துல்கர் சல்மான் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் Thug Life திரைப்படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Lekshmi

இந்த சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்து புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது "தக் லைஃப்" திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்கின்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. மணிரத்தினம் அவர்கள் தனது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த பல கதாபாத்திரங்களை இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் பிறந்த மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா!

click me!