செம்ம ஹாப்பி நியூஸ்! ஏப்ரல் 23ம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?

First Published Apr 17, 2024, 8:50 AM IST

மங்கல தேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Mangala Devi Kannagi Temple

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இந்த கோவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று வருடத்தில் ஒருநாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. 

Local Holiday

 அதன்படி மங்கலதேவி கண்ணகி கோவிலில் இந்த ஆண்டு  23ம் தேதி சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Theni District Collector

இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தேனி மாவட்டத்தில் 23.04.2024 (செவ்வாய்க்கிழமை) அன்றைய தினம் அரசு அலுவலகங்களும், அரசு சார்ந்த துறைகளுக்கும் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: Tamilnadu Rain:அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் எந்தெதந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு? சென்னையின் நிலை என்ன?

Government Employee

இந்த உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம்-1881 (Negotiable Instruments Act-1881) கீழ் வராது என்பதால், அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன், செயல்படும். மேலும் உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே 4ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!