24 கேரட் தங்க சிலை போல்... கோல்டன் நிற உடையில் மின்னும் 'தங்கலான்' நாயகி மாளவிகா மோகனன்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published Mar 20, 2024, 1:35 PM IST

நடிகை மாளவிகா மோகனன், தங்க நிற உடையில்... அழகு தேவதை போல் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான, நடிகை மாளவிகா மோகனனனை தமிழில், அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

முதல் படத்தில் கதாநாயகி வாய்ப்பை மிஸ் செய்து விட்டாலும், தன்னுடைய இரண்டாவது படத்தில் அதிரடியாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து... பல இளம் நடிகைகளை பொறாமைப்பட வைத்தார்.

ஓடிடியில் 40 நாட்களை கடந்தும் உலகளவில் டிரெண்டிங்கில் கலக்கும் 'கேப்டன் மில்லர்'! சாதனையை கொண்டாடும் ரசிகர்கள்

'மாஸ்டர்' படத்தில் மாளவிகா மோகனன் முக்கியத்துவம் இல்லாத, கதாநாயகி ரோலை தேர்வு செய்து நடித்துள்ளார் என்கிற விமர்சனங்கள் ஒரு பக்கம் பறந்தாலும், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இவரை மாற்றியது இப்படம்.

'மாஸ்டர்' படத்திற்கு பின்னர், தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்தில் நடித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. 

Samantha Photos: கழுத்தோடு கட்டிய சிறகு போன்ற உடை! நடுவில் கேப்... டாப் கவர்ச்சியில் புகுந்து விளையாடிய சமந்தா

இதை தொடர்ந்து தமிழில் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன்... தொடர்ந்து தரமான மற்றும் வலுவான ரோலை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாளவிகா மோகனன் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'தங்கலான்'. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ஒரு காட்டுவாசி பெண்ணாக நடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம், கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கல்யாணம் நடந்தே தீரும்.. குணசேகரன் பேச்சால் வெடிக்கும் பிரச்சனை? பரபரப்பான எதிர்நீச்சல் புரோமோ!

 தற்போது இவரின் கைவசம் 2 ஹிந்தி திரைப்படம் மற்றும் 1 தெலுங்கு படம் உள்ள நிலையில்... அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது, கண்களை கவரும் தங்க நிற உடையில்... மாளவிகா மோகனன் எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நான் மட்டும் நயன்தாராவுக்கு சளைத்தவளா என்ன? தரம் பிரித்து... லிஸ்ட் போட்டு.. கோடியில் கல்லா கட்டும் சமந்தா!

click me!