சிவராத்திரி 2024 : சிவராத்திரிக்கு முன்பு கனவில் இவற்றில் எது வந்தாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்!

First Published Feb 26, 2024, 10:58 AM IST

சிவராத்திரிக்கு முன்பு வரும் கனவில் சிவபெருமான் சில விஷயங்களை நமக்கு முன்னறிவிப்பதாக ஐதீகம்.

பொதுவாகவே, நாம் தூங்கும் போது நமக்கு கனவு வருவது வழக்கம். சில கனவுகள் சுபமாகவும், அசுபமாகவும் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் நமக்கு வரும் கனவுகளை சரியாக புரிந்து கொண்டால் வரவிருகும் ஆபத்துகளை முன்கூட்டியே தவிர்க்கலாம். அந்தவகையில், சிவராத்திரிக்கு முன்பு சிவபெருமான் சில விஷயங்களை கனவில் நமக்கு முன்னறிவிப்பதாக ஐதீகம்.

இந்த ஆண்டு, மகாசிவராத்திரி மார்ச் 8ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. இந்நாளில் சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் சிவன் மகிழ்ச்சி அடைவார். அதுமட்டுமின்றி இந்த தேதியில், விரதம், வழிபாடு, விழிப்பு, சிவ நாமத்தை தியானம் செய்தல் ஆகியவை சிவபெருமானின் அருளை பெற உதவும். அந்தவகையில், மகாசிவராத்திரிக்கு முன்பு சில கனவுகள் வரும். அவை நல்ல அர்த்தத்தைக் குறிக்கிறது. மேலும் இவை சிவபெருமானின் ஆசிகள் உங்களுக்கு இருப்பதாகக் குறிக்கிறது  மற்றும் அவை மகிழ்ச்சியைத் தரும். எனவே, இப்போது சிவராத்திரிக்கு முன் வரும் கனவுகள் மற்றும் அதன் அர்த்தத்தைப் பற்றி இங்கு பார்க்கலாம்..

சிவலிங்கத்திற்கு அபிஷேகம்: மகாசிவராத்திரிக்கு முன்பு, கனவில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் வந்தால், அந்த நபரால் 
சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து, அவரது வாழ்க்கையில் இருக்கும் எல்லா விதமான கஷ்டங்களையும் விரைவில் நீக்குவார். அதுமட்டுமின்றி, அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி விரைவில் வரப்போகிறது என்று அர்த்தம். 

வில்வ மரம்: ஒரு நபர் மகா சிவராத்திரிக்கு முன்பு கனவில் வில்வ மரத்தையும், இலைகளையும் கண்டால் அவரது பொருளாதார பிரச்சனைகள் விரைவில் தீரும் என்று அர்த்தம்.

ருத்ராட்சம்: மகாசிவராத்திரிக்கு முன்பு கனவில் ருத்ராட்சம் வந்தால் அது  மங்களகரமானது என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் இந்த கனவு வந்தால் அந்த நபரின் துன்பங்கள், நோய்கள், தோஷங்கள் நீங்கும் மற்றும் அவரது நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் முடியும்.

இதையும் படிங்க:  மகா சிவராத்திரி 2024: சிவனுக்கு பிடித்த ராசிகள் இவர்கள் தான்.. உங்க ராசி இருக்கா..?

பாம்பு: மகாசிவராத்திரிக்கு முன்பு கனவில் பாம்பு வந்தால், நல்லது. ஏனெனில், அது செல்வத்தின் சின்னமாகும்.

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2024 எப்போது? எப்படி விரதம் இருப்பது? என்ன பலன்கள் கிடைக்கும்?

நந்தி: சிவராத்திரிக்கு முன் அல்லது சிவராத்திரி அன்று கனவில் நந்தி வந்தால், சிவபெருமானின் அருள் நிச்சயமாக கிடைக்கும் என்று அர்த்தம். மேலும், இந்த கனவு அந்த நபரின் வெற்றியைக் குறிக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

திரிசூலம்: மகாசிவராத்திரி அன்று கனவில் திரிசூலம் வந்தால், உங்களது எல்லா கஷ்டங்களையும் சிவன் அழிக்கப் போகிறார் என்று அர்த்தம்.

கருப்பு சிவலிங்கம்: மகாசிவராத்திரிக்கு முன்பு கனவில் கருப்பு சிவலிங்கம் வந்தால், அந்த நபருக்கு விரைவில் பணியில் பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
 

click me!