2023ல் வரவிருக்கும் டாப் 10 கார்களின் பட்டியல்... இந்திய சந்தையில் களமிறக்கப்படும் கார்களின் விவரங்கள் இதோ!!

First Published Jan 12, 2023, 6:27 PM IST

இந்திய ஆட்டோமொபைல் துறையில் கடந்த ஆண்டு பல மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பல்வேறு நிறுவனங்களின் பல மின்சார வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில் இந்தியாவில் 2023 இல் வரவிருக்கும் டாப் 10 கார்களின் பட்டியலை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். 

Maruti Suzuki Jimny

உலகளவில் பிரபலமான சுசுகி ஜிம்னியை அடிப்படையாகக் கொண்ட காம்பாக்ட் எஸ்யூவியான ஃபைவ் டோர் ஜிம்னியை மாருதி சுஸுகி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் ஆஃப்-ரோடு செல்லும் திறன்கள் மற்றும் வலுவான வடிவமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கார் ரசிகர்களை அதிகளவில் ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.

Honda Compact SUV

வரும் ஆண்டுகளில் சிறிய, நகரங்களுக்கு ஏற்ற ஒரு புதிய காம்பாக்ட் எஸ்யூவியை ஹோண்டா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் எஸ்யூவிகளுக்கான சந்தையை இலக்காகக் கொண்டு ஹோண்டா இந்த புதிய மாடல் கச்சிதமான அளவு மற்றும் எளியமுறையில் கையாளக்கூடிய வகையில் காம்பாக்ட் எஸ்யூவியை வெளியிடும் என என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நெரிசலான நகர தெருக்களிலும் எளிதாக செல்லும் வகையில் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. 

Mahindra XUV 400 EV

மஹிந்திரா தனது XUV 400 எலக்ட்ரிக் SUV காரை 2023 இல் இந்தியாவில் வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இது விரைவில் சந்தையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

Tata Punch EV

Tata Punch EV என்பது இந்திய சந்தையில் பிரபலமான Tata Punch இன் மின்சார ரக வாகனம் ஆகும். இது பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் கூறப்படுகிறது. 

Tata Harrier Facelift

2023 ஆட்டோ ஷோவில் மேம்படுத்தப்பட்ட ஹாரியரை டாடா வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஹாரியர் மற்றும் சஃபாரிக்கான புதிய அப்டேட்களையும் டாடா வெளியிடும் என்பதால் இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது/ 

Tata Safari Facelift

டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவை இந்திய சாலைகளில் ஏற்கனவே பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளன. இதை அடுத்து டாடா மோட்டார்ஸ் பல்வேறு SUV மற்றும் EV களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி எஸ்யூவிகளான ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் காண்பிக்கும் என்று கூறப்படுகிறது.  

2023 Hyundai Creta Facelift

ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவில் பிரபலமான காம்பாக்ட் SUV ஆகும், சந்தையில் போட்டியிடக்கூடிய வகையில் 2023 மாடல் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டை அந்நிறுவனம் வெளியிட உள்ளத். புதுப்பிக்கப்பட்ட க்ரெட்டாவில் புதிய கிரில் மற்றும் பம்பர் டிசைனுடன் திருத்தப்பட்ட முன் ஃபாசியா உட்பட பல ஒப்பனை மாற்றங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

New-Gen Hyundai Verna

புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் வெர்னா காம்பேக்ட் செடான் இந்திய சந்தையில் பிரபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டைலான மற்றும் நன்கு பொருத்தப்பட்ட செடானைத் தேடுபவர்கள் இதனை தேர்வு செய்யலாம். இந்த கார் பல மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. 

Maruti Suzuki YTB Coupe SUV

மாருதி சுஸுகி YTB Coupe SUV ரக கார்கள் இந்த ஆண்டில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த சிறிய SUV ஒரு ஸ்போர்ட்டி மற்றும் ஸ்டைலான வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மாருதி சுஸுகி YTB கூபே எஸ்யூவி, ஸ்டைலான மற்றும் நடைமுறையான சிறிய எஸ்யூவியை விரும்புபவர்களுக்கு சிறந்த காராக அமையும். அதன் ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இருக்கும் இந்த கார் விற்பனைக்கு வரும் போது சந்தையில் வெற்றி பெறும் என்பது உறுதி.

Kia Seltos Facelift

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட செல்டோஸ், புதிய கிரில் மற்றும் பம்பர் டிசைனுடன் திருத்தப்பட்ட முன் ஃபாசியா உட்பட பல மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தப்பட்ட டாஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் புதிய மெட்டீரியல், டிரிம் உள்ளிட்ட பல திருத்தங்களுடன் இந்த கார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!