இவங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா? 50 வயதிற்கு மேல் ஆகியும் அழகு குறையாத 80ஸ் பிரபலங்கள்! ரீ-யூனியன் போட்டோஸ்!

First Published Apr 16, 2024, 5:01 PM IST

வருடம் தவறாமல், ஒன்றாக சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ள 80'ஸ் பிரபலங்கள் அண்மையில் சந்தித்தபோது எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

எத்தனை வயதானாலும், நண்பர்களை சந்தித்து பேசும் போதும், நாம்  நம்முடைய கஷ்டங்கள், வலிகளை மறந்து, நம்முடைய இளமை பருவத்திற்கே சென்று விடுவோம். அப்படி பட்ட ஒரு வலுவான உறவு தான் நட்பு.

இந்த நட்பை போற்றும் விதமாகவே, ஒவ்வொரு வருடமும் 80'களில் முன்னணி நடிகர் - நடிகையாக இருந்த பிரபலங்கள், வெளிநாடுகளிலோ அல்லது நட்சத்திர ஹோட்டல்களிலோ சந்தித்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Rajinikanth: என் நீண்ட நாள் நண்பரின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது! பிரபல நடிகருக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

அந்த வகையில், இம்முறை 80'ஸ் பிரபலங்களின் சந்திப்பு மிகவும் எளிமையான முறையில் நட்சத்திர ஹோட்டலில் நடந்துள்ளது. இதில் குஷ்பூ, லிசி, சுஹாசினி, ஜெயஸ்ரீ, மோகன், ரஹ்மான், பூர்ணிமா, அம்பிகா போன்ற சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

பொதுவாக ரீ-யூனியன் என்றால்... வெளிநாடுகளுக்கோ, அல்லது மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு சென்று ஒரே கலர் உடை அணிந்து கொண்டாடும் 80'ஸ் பிரபலங்கள் இப்படி எளிமையாக சந்தித்திருப்பதால், இது திடீர் என முடிவு செய்யப்பட்ட சந்திப்பு என்பது தெரிகிறது.

விஜய் டிவியில் உருவான மீண்டும் புது ஒரு காதல் ஜோடி? கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு... வைரலாகும் போட்டோஸ்!

மேலும் இதில் கலந்து கொண்டுள்ள அனைவருமே மிகவும் உற்சாகமாக உள்ளார். லிசி, குஷ்பூ, சுஹாசினி, மோகன், ரஹ்மான் போன்ற நடிகர்களுக்கு 50 வயதுக்கு மேல் ஆகியும் அவர்களின் அழகு கொஞ்சம் கூட குறையாமல் உள்ளதையும் பார்க்க முடிகிறது.

இதை பார்த்து ரசிகர்கள் பலர், உங்களுக்கெல்லாம் வயசு ஆகுமா? ஆகாதா என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். 80'ஸ் பிரபலங்களின் இந்த மீட் குறித்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Priya Bhavani Shankar: வெள்ளை நிற சேலையில்... சைடு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்! நயன்தாரா போல இருக்காங்களே

click me!