Trisha Car Collection : த்ரிஷானா சும்மாவா.. டாப் ஹீரோக்களுக்கு நிகரான கார் கலெக்ஷன் - ஒரு லிஸ்டே இருக்கு!

First Published May 4, 2024, 11:09 AM IST

Actress Trisha Car Collection : இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை த்ரிஷாவிற்கு, திரை பிரபலங்களும், அவரது தவிர ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Benz s class

தமிழ் திரை உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் திரிஷா கோலிவுட் உலகின் மிகவும் பணக்கார நடிகைகளில் ஒருவர். படத்திற்கு பல கோடிகள் வரை சம்பளம் வாங்கும் இவரிடம் சொகுசு கார்கள் பல இருக்கின்றது. குறிப்பாக திரிஷாவிடம் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் கார் ஒன்று உள்ளது இதன் மதிப்பு சுமார் 80 லட்சம்.

Trisha : “விஜய் கிட்ட அந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிக்காது.. இரிட்டேட் ஆகும்” த்ரிஷா ஓபன் டாக்..

BMW 5 Series

தனது கலெக்ஷனில் பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் ஆகிய கார்களை திரிஷா வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக BMW காரின் 5 சீரிஸ் ஒன்றை தன்வசம் வைத்துள்ளார் நடிகை திரிஷா. அதன் விலை சுமார் 75 லட்சம் ஆகும்.

Range Rover Evoque

அதேபோல பிரபல ரேன்ஜ் ரோவர் நிறுவனத்தின் கார் ஒன்றும் திரிஷாவிடம் உள்ளது. Range Rover Evoque தான் அது. அதன் விலை சுமார் 60 லட்சம் ரூபாய் ஆகும். திரிஷாவிற்கு பிடித்தமான கார்களில் அதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது

BMW

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ரீகள் எனப்படும் ஒரு தனித்துவம் வாய்ந்த காரையும் திரிஷா தன்வசம் வைத்திருக்கிறார். இதன் விலை சுமார் 5 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. திரிஷாவிடமுள்ள மிகவும் விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று.

Bollywood : "ஐயய்யோ நான் குடிக்க மாட்டேன்" - ஆல்கஹாலை பார்த்தாலே அலறும் டாப் 8 பாலிவுட் நடிகர்கள்!!

click me!