Bitumen Scam : Bitumen என்பது பெட்ரோலியத்தில் உள்ள அதிக பிசுபிசுப்பான ஒரு அமைப்பாகும். இதைக்கொண்டு தான் சாலைகளை அமைக்கின்றனர். இந்நிலையில் சுமார் 750 கோடி மதிப்பிலான ஒரு Bitumen மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் இதுகுறித்து பேசுகையில் "2015-17 காலகட்டத்தில் மாநில நெடுஞ்சாலை துறையில் சாலை போடும் ஒப்பந்தங்களில் தார் பிடுமென் விலை, சாலை போடும் பொழுது இருந்த நடப்பு சந்தை விலைக்கு செலவினம் செய்யாமல் டெண்டர் போடும் பொழுது இருந்த விலைக்கு ஒப்பந்ததாரருக்கு கொடுத்தது ஒப்பந்தபடி தவறு என்றும் அந்த முறைகேட்டில் ஈடுபட்ட 1131 மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை 2021 மற்றும் மார்ச் 2023 இல் தெரிவித்து இருந்தது".
"இது குறித்து அறப்போர் இயக்கம் ஆகஸ்ட் 2023 இல் அரசுக்கு புகார் அனுப்பினோம். முறைகேட்டில் ஈடுபட்ட ஓய்வு பெற இருந்த எ.வ. வேலுவின் அப்போதைய PA ஜெயசேகருக்கு துறை ரீதியான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு நிபந்தனை ஓய்வு கொடுத்தனர். ஆனால் வேலையில் உள்ள மற்றவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் 20/09/2023 அன்று கடிதம் அனுப்பினோம்".
Elephant: மூணாரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அதே ஸ்டைலில் எண்ட்ரி கொடுத்த படையப்பா
"அதன் பிறகு நவம்பர் 2023 இல் மாநில நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க குழு அமைத்தது. ஆனால் இன்று வரை 1100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளது நெடுஞ்சாலை துறை. எனவே இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் சில அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளோம். அதை இத்துடன் இணைக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.