Elephant: மூணாரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அதே ஸ்டைலில் எண்ட்ரி கொடுத்த படையப்பா

By Velmurugan s  |  First Published May 17, 2024, 8:04 PM IST

மூணாரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் படையப்பா யானை மீண்டும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் என்பது வனப்பகுதி நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சாலையோரம் உலா வரும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்வதும். புகைப்படம் எடுப்பதும் வழக்கமாகும். இந்நிலையில் மூணாரில்  பொது இடங்கள் மற்றும் மக்கள் குடியிறுப்புகளுக்கு அருகே அடிகடி படையப்பா யானை உணவு தேடி  உலா வந்துக்கொண்டிருந்தது. 

பாமக, நாம் தமிழர் கட்சியே ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது எங்களுக்கு ஆசை இருக்காதா? செல்வப்பெருந்தகை

Tap to resize

Latest Videos

கடும் வெயில் நிலவியதால் வனபகுதியில் உணவு கிடைக்காமல் சாலையோர கடைகள், பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள திண்பண்டங்கள், விளை பயிர்களை உணவாக எடுத்துக்கொண்டது. எப்பொழதும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் படையப்பா யானை நடமாடினாலும் யாருக்கும் எவ்வித அச்சறுத்தலையும் இதுவரை ஏற்படுத்தியது கிடையாது. ஆனால் சாலையோர கடைகளை சேதப்படுத்துவதும் வழக்கமாகும்.

சிலம்பத்தில் பதக்கங்களை அள்ளி குவித்த மாணவன் கிணற்றில் மூழ்கி பலி - மதுரையில் பரபரப்பு

இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பின்னர் உணவு தேடி வந்த படையப்பா யானை முணார் அருகேயுள்ள குப்பைகள். மற்றும் காய்கறி கழிவுகளை தரம் பிரிக்கும் இடத்திற்கு வந்து அங்கு தரம் பிரிந்து வைக்கப்பட்டிந்த காய்கறிகளை உணவாக எடுத்துக்கொண்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள விளைநிலைங்களையும் சேதப்படுத்தியாகக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை துரிதமாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.

click me!