இந்த வருஷம் மிஸ் ஆயிடுச்சு.. No Problem 2024ல் பார்த்துக்கலாம் - 2023ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 மூவிஸ்!

First Published Dec 8, 2023, 8:31 AM IST

Top 3 Movies Not Released in 2023 : இந்த 2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையில் இவ்வாண்டு ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தும், வெளியாகாமல் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள உள்ள டாப் 3 திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Vanangaan Movie

வணங்கான்.. முதலில் பிரபல நடிகர் சூர்யா அவர்கள் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி அந்த படத்திற்கான படபிடிப்பு பணிகளும் துவங்கிய நிலையில், இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இடைநன்ற திரைப்படம் தான் வணங்கான். 

அதன்பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமானாலும், தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தள்ளிப்போனது. பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக துவங்கிய இந்த திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்கின்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் 50 மட்டும் இல்ல.. அந்த படத்திற்கும் நான் தான் இசை?.. "அவர்" தான் ஹீரோ - ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

Captain Miller

கேப்டன் மில்லர்.. மிகப்பெரிய பொருட்செலவில் பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரபல நடிகர் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை களத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு போர்வீரரின் கதையை தழுவி இந்த திரைப்படம் உருவாகிறது என்றும், 1930களின் துவக்கத்தில் உள்ளது போன்ற கதைக்களம் கொண்ட படம் இது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இந்த திரைப்படம், இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்திற்காக சில பிரத்தியேக பணிகள் மேற்கொண்ட நிலையில் இப்படம் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith kumar

விடாமுயற்சி.. முதலில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு இந்த திரைப்படம் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களிடம் சென்றது. இவ்வாண்டு துவக்கத்திலேயே இந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும் பல மாதங்கள் இப்படத்தின் டைட்டில் வெளியாகவே எடுத்துக் கொண்டதால் இவ்வாண்டு இறுதியில் நிச்சயம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இன்னும் படபிடிப்பு பணிகளே முழுமையாக முடிவடையாத நிலையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தான் இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் தல அஜித் அவருடைய ரசிகர்களுக்கு இவ்வாண்டு விடாமுயற்சி வெளியாகாதது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!