இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது நோக்கம் – ஹர்ஷித் ராணா!

First Published May 6, 2024, 1:23 PM IST

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ஹர்ஷித் ராணா கூறியுள்ளார்.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 54ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ரன்கள் எடுத்தார்.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

பின்னர் கடின இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் கேஎல் ராகுல் மட்டுமே அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Harshit Rana

பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஹர்ஷித் ராணா 3.1 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி 2 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

LSG vs KKR, 54th IPL 2024 Match

இந்தப் போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றதன் மூலமாக 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் +1.453 நெட் ரன் ரேட் அடிப்படையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.20 லட்சத்திற்கு இடம் பெற்று விளையாடி வரும் ராணா, இதுவரையில் 9 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், அவர் 31.1 ஓவர்கள் வீசி 298 ரன்கள் கொடுத்து 14 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

ஆனால், ஒரு முறை கூட 4 விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை. மேலும், விக்கெட்டுகள் கைப்பற்றி அத்துமீறி நடந்து கொண்ட நிலையில், போட்டி சம்பளத்திலிருந்து 100 சதவிகித கட்டணமும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராணா விளையாடவில்லை.

Kolkata Knight Riders

நேற்றைய போட்டியிலும் கேஎல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், தனக்கு தானே அமைதியாக இருக்கும்படி சிக்னல் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலானது. இந்த நிலையில், இந்த போட்டிக்கு பிறகு பேசிய ராணா கூறியிருப்பதாவது: இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது நோக்கம்.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

ஆனால், இப்பொழுது எந்த அணிக்காக விளையாடினாலும், போட்டியில் சிறப்பான விளையாட்டை வழங்க முயற்சிக்கிறேன். எனது செயல்பாடு மற்றும் செயல்திறன் அடிப்படையில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவேன் என்று நம்புவதாக 22 வயதான ராணா கூறியுள்ளார்.

click me!