KGF Archana Jois: தமிழ் சீரியலில் நடித்த KGF 2 ராக்கி பாயோட அம்மா...எந்த சீரியல் தெரியுமா..? வெளியான தகவல்...

First Published Apr 23, 2022, 11:49 AM IST

KGF, Archana Jois: கதக் நடன கலைஞரான 27வயது கொண்ட அர்ச்சனா ஜோய்ஸ், கேஜிஎஃப் படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளார்.

archana jois

கன்னட நடிகராக இருந்த யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கேஜிஎப் என்கிற பிரமாண்ட படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டியை ஓரங்கட்டி விட்டு, இப்போது இன்னொரு பிரபலம் மக்களிடம் பிரபலமாகியுள்ளார்.

archana jois

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, கன்னட சினிமாவில்  யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் பிரம்மாண்டமாக கடந்த ஏப்ரல் 14-ந் தேதி வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்த படம் உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டது.

archana jois

வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. தியேட்டர்களில் சக்கைபோடு போட்டு வரும் கே.ஜி.எஃப் 2 படத்தின் கதாநாயகன் யஷ்ஷை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்போது இன்னொரு பிரபலம் மக்களிடம் பிரபலமாகியுள்ளார்.

archana jois

கதக் நடன கலைஞரான 27வயது கொண்ட அர்ச்சனா ஜோய்ஸ், கேஜிஎஃப் படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளார். இவரது, அழகை பார்த்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். மேலும், இவரை ஹீரோயினாக நடிக்க வைக்கவும் பரிந்துரைக்கின்றனர்.

archana jois

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்துள்ளார். அண்மையில் இவர் நாயகன் யஷ்ஷுடன் இணைந்து எடுத்த போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது. 
 

archana jois

அர்ச்சனா, ஸ்ரேயாஸ் உடுப்பா என்பவரை திருமணம்  கொண்ட இவர், தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.  

archana jois

இந்நிலையில், மற்றுமொரு சுவராஸ்யமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கன்னட சினிமாவில் மட்டுமே கலக்கிய  அர்ச்சனா தமிழிலும் ஒரு சீரியல் நடித்துள்ளார் என்பதாகும். 

archana jois

ஆம், பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த சுப்புலட்சுமி என்ற தொடரில் நடித்திருக்கிறார். ஆனால், அந்த சீரியல் ஏதோ காரணங்களால் இன்னும் வெளியாகவில்லையாம்.

click me!