வடபோச்சே... அட்டர் பிளாப் ஆன அண்ணாத்த படத்துக்காக 2 பிளாக்பஸ்டர் ஹிட் பட வாய்ப்பை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்!

First Published Feb 16, 2024, 3:56 PM IST

அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் நடிக்க ஆசைப்பட்டு, நடிகை கீர்த்தி சுரேஷ் நிராகரித்த இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் பட வாய்ப்புகள் பற்றி பார்க்கலாம்.

keerthy suresh

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இதுவரை கோலிவுட், டோலிவுட்டில் கலக்கி வந்த அவர் தற்போது பாலிவுட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு, அட்லீ தயாரிப்பில் உருவாகும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அட்லீ இயக்கத்தில் தமிழில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் இந்தி நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh Rejected Movies

இதுதவிர தமிழில் ரகு தாதா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ள அவர் நடிப்பில் சைரன் என்கிற திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அந்தோணி பாக்யராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் போலீஸாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படி கோலிவுட், பாலிவுட் என செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வரும் கீர்த்தி, 2 பிளாக்பஸ்டர் ஹிட் பட வாய்ப்புகளை நழுவ விட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்...Vishnu Vishal Salary: 'லால் சலாம்' வெற்றியால் சம்பளத்தை மளமளவென உயர்த்திய விஷ்ணு விஷால்! முழு விவரம் இதோ!

Annaatthe movie Keerthy Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ், சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்திருந்தார். தேசிய விருது வென்ற கையோடு கீர்த்தி சுரேஷ் நடித்த படம் இது என்பதால் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதில் கீர்த்தி சுரேஷ் மட்டுமின்றி நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் இப்படம் அட்டர் பிளாப் ஆனது. இந்த படத்தில் நடிக்க ஆசைப்பட்டு தன் இரண்டு பிரம்மாண்ட வெற்றி பட வாய்ப்புகளை மிஸ் பண்ணி உள்ளார் கீர்த்தி.

Ponniyin selvan Kundavai

அதில் ஒன்று மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் படமான பொன்னியின் செல்வன். இப்படத்தில் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது கீர்த்தி தான். அண்ணாத்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் அந்த வாய்ப்பு திரிஷாவுக்கு சென்றுவிட்டது.

Shyam Singha Roy sai pallavi

அதேபோல் அண்ணாத்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ் நிராகரித்த மற்றொரு படம் ஷியாம் சிங்கா ராய். இப்படத்தில் சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷை தான் நடிக்க அணுகினார்களாம். ஆனால் கால்ஷீட் இல்லாததால் அவர் நோ சொல்லிவிட்டார். இப்படமும் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்...லிப் லாக்கா? வாய்ப்பில்ல ராஜா.. பிரபல நடிகருடன் நடிக்க "நோ" சொன்ன கீர்த்தி சுரேஷ் - அவரே கொடுத்த விளக்கம்!

click me!