ஷூட்டிங்கிற்கு டைமுக்கு வர்றதில்ல... தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு கவின் கொடுத்த தரமான பதிலடி

First Published Mar 10, 2024, 11:11 AM IST

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின், படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வருவதில்லை என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.

kavin

சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து பிரபலமானவர் கவின். அதுவரை சின்னத்திரையில் கலக்கி வந்த கவினை வெள்ளித்திரை நோக்கி நகர்த்திவிட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி கோலிவுட்டில் அடுத்தடுத்த உயரங்களை எட்டி வருகிறார் கவின். அவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு கவினுக்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவினுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் நடிப்பில் தற்போது ஸ்டார் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர நெல்சன் தயாரிப்பில் ஒரு படம், நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படம் என செம்ம பிசியாக நடித்து வருகிறார் கவின். அடுத்த சிவகார்த்திகேயன் என்கிற ரேஞ்சுக்கு கவினை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நூறு ஆண்டு உன்னோடு... வாழவேண்டும் மண்ணோடு! முத்தமழை பொழிந்த நயன் - விக்கி ஜோடியின் ரொமாண்டிக் கிளிக்ஸ் இதோ

இப்படியான சூழலில் அண்மையில் தயாரிப்பாளர் ஒருவர் கவின் பற்றி முன்வைத்த குற்றச்சாட்டு ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆனது. அதன்படி, கவின் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை என்றும், அப்படி வந்தாலும் கேரவனிலேயே அதிக நேரம் செலவிடுவதாகவும் கூறி இருந்தார். ஒரு படம் ஹிட் ஆனதும் இப்படியா என கவினை நெட்டிசன்கள் வசைபாடி வந்தனர். தற்போது அந்த சர்ச்சைக்கு சூசக பதிலடி கொடுத்துள்ளார் கவின்.

அண்மையில் கல்லூரி விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த கவின், அங்கு வந்ததும் மாணவர்களை பார்த்து நான் கரெக்ட் ஆன டைமுக்கு வந்திருக்கனா என கேட்டார். ஆமாம் என சொன்ன மாணவர்களிடம், நான் எத்தனை மணிக்கு வருவேன்னு சொன்னாங்க என கேட்க, அதற்கு அவர்கள் 7 மணி என கத்தினர். தான் 6 மணிக்கே இந்நிகழ்ச்சிக்காக தயாராகிவிட்டதாகவும், என்னை அழைக்க வந்தவர் 6.45க்கு தான் வந்தார்கள். அவர்கள் தான் லேட் செய்துவிட்டார்கள். அவர்களுக்ககாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறி தன்னைப்பற்றிய சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் கவின்.

இதையும் படியுங்கள்... மஞ்சும்மல் பாய்ஸ்.. படமா இது; எரிச்சலூட்டுகிறது! மலையாள பொறுக்கிகளை ஆதரிக்ககூடாது- எழுத்தாளர் ஜெயமோகன் காட்டம்

click me!