தலைவர் 171-க்காக காத்திருந்த கமலுக்கு விபூதி அடித்துவிட்டு... கலாநிதி மாறனிடம் ஐக்கியமான ரஜினி - பின்னணி என்ன?

First Published Sep 12, 2023, 10:58 AM IST

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக இருந்த தலைவர் 171 படம் கலாநிதி மாறனுக்கு கைமாறியது பற்றிய ஷாக்கிங் தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

Rajinikanth, kamalhaasan

கமல்ஹாசன் தற்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் செம்ம பிசியாக உள்ளார். இவர் நடத்தி வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.21 திரைப்படம் தற்போது முழுவீச்சில் உருவாகி வருகிறது. இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.

Kamal, Rajini

இதையடுத்து சிம்புவின் எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தையும் கமல் தான் தயாரிக்கிறார். அப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார் கமல்ஹாசன். இதேபோல் மணிரத்னம் மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கும் அடுத்த இரண்டு படங்களையும் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் கமல்ஹாசன்.

இதையும் படியுங்கள்... நெல்சனை கழட்டிவிட்டு.. ரஜினியின் ‘தலைவர் 171’ படத்துக்காக மீண்டும் இணைந்த ஜெயிலர் கூட்டணி- வெளியானது அறிவிப்பு

Superstar Rajinikanth, Ulaganayagan Kamalhaasan

இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தையும் கமல் தான் தயாரிக்க உள்ளாராம். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. இப்படி தயாரிப்பில் படு பிசியாக இருக்கும் கமல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருந்தார். அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்படம் தாமதம் ஆனதால் அதை அப்படியே கிடப்பில் போட்டனர்.

Rajinikanth, Lokesh Kanagaraj

அந்தப்படம் எப்போது தொடங்கப்படும் என காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று அதுகுறித்த குட் நியூஸ் வெளியானது. அதன்படி லோகேஷ் கனகராஜ் தான் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் அதில் ஒரு டுவிஸ்ட் என்னவென்றால், கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை தற்போது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

Rajinikanth, Kalanithi Maran

கமல்ஹாசனிடம் இருந்து இப்படம் கைநழுவி போனதற்கு ரஜினி தான் காரணம் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடைசியாக ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அந்நிறுவனம் ரஜினிக்கு சுமார் 200 கோடியை வாரி வழங்கியது. தற்போது தலைவர் 171 படத்தையும் சன் பிக்சர்ஸிடம் கொடுத்தால் கூடுதலாக சம்பளம் கிடைக்கும் என்பதால் தான் ரஜினி இப்படத்தை கலாநிதி மாறனிடம் கொடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு! பின்னணி என்ன? வைரலாகும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ்!

click me!