கைதி 2 முதல் சிறுத்தை 2 வரை! கார்த்தியின் லைன் அப்பில் நிரம்பி வழியும் பார்ட் 2 படங்கள்- அதுக்குன்னு இத்தனையா?

First Published Oct 29, 2023, 3:03 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அவர் நடிப்பில் உருவாக உள்ள இரண்டாம் பாக படங்களைப் பற்றி பார்க்கலாம்.

Actor karthi upcoming movies

தமிழ் திரையுலகில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் கார்த்தி. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் கார்த்தியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ஜப்பான் திரைப்படம் தயாராகி உள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள இப்படத்தை ராஜு முருகன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு பின்னர் நடிகர் கார்த்தி வரிசையாக இரண்டாம் பாக படங்களில் நடிக்க உள்ளாராம். அதைப்பற்றி பார்க்கலாம்.

கைதி 2

ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்து வரும் கார்த்தி, அப்படத்தை முடித்த கையோடு, கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அவர் ரஜினியின் தலைவர் 171 பட ஷூட்டிங்கை முடித்ததும் கைதி 2 படத்தை தொடங்க உள்ளார்.

சர்தார் 2

கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த திரைப்படம் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படம் தண்ணீரின் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சிகளை பேசியது. சர்தார் படம் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்ததால், அப்படத்தின் வெற்றி விழாவில் அதன் இரண்டாம் பாகம் உருவாவதை அறிவித்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தீரன் 2

கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர்களில் ஹெச்.வினோத்தும் ஒருவர். அவர் இயக்கத்தில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளும் ஒருபக்கம் நடந்து வருகிறதாம்.

மெட்ராஸ் 2

கார்த்தி - பா.இரஞ்சித் கூட்டணியில் வெளிவந்த ஒரு மாஸ்டர் பீஸ் படம் தான் மெட்ராஸ். வடசென்னை மக்களின் வாழ்க்கையை அவ்வளவு எதார்த்தமாக காட்டி இருந்தது அப்படம். அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்துக்காக இணைய உள்ளது அண்மையில் உறுதியானது. அது மெட்ராஸ் 2ம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிறுத்தை 2

கார்த்தியை ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய படம் சிறுத்தை. சிவா இயக்கிய இப்படம் இன்றளவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு வரவேற்பை பெற்ற அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தான் விரும்புவதாக இயக்குனர் சிறுத்தை சிவா ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண்... 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

click me!