Horoscope: குருவின் மாற்றத்தால் பேர் அதிர்ஷ்டம்...யாருக்கு ஆபத்து? யாருக்கு நம்மை? இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

First Published May 26, 2022, 5:01 AM IST

Horoscope Today- Indriya Rasipalan 26 may 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, குருவின் உச்சத்தில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பாக அமையும். குறிப்பிட்ட சில ராசிக்கு மிகுந்த எச்சரிக்கை அவசியம். அப்படி இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்:

இன்று குடும்பம் மற்றும் சமூகப் பணிகள்  சிறப்பாக நடக்கும். இன்று புது முகங்களை சந்திப்பீர்கள், இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆன்மிக யாத்திரையும் மேற்கொள்ளலாம். பிறருடன் பழகும் போது கவனமாக இருங்கள். கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது என்பதால், சோம்பல் உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். இன்று,நல்ல செய்தி நெருங்கிய நபரிடமிருந்தோ அல்லது அனுபவம் வாய்ந்த நபரிடமிருந்தோ பெறலாம். குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலக் குறைபாடுகள் இருப்பதால், நீங்கள் வீடு மற்றும் வணிகம் இரண்டிலும் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். அதிகப்படியான வேலை பலவீனம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும்.
 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்:

சமூக தொடர்பான விஷயங்களில் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு மகிழ்ச்சியையும் புதிய ஆற்றலையும் தரும். மாணவர்களும் கடின உழைப்பால் சரியான பலனைப் பெறலாம். பொழுதுபோக்கிலும் நேரம் செலவிடுங்கள். குடும்பத்தில் ஒருவரின் திருமணப் பிரச்சனை, குடும்பத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தும். ஆனால் இம்முறை பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுங்கள். உங்கள் ஆலோசனையும், ஒத்துழைப்பும் பல கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கும். இன்று தொலைபேசி அழைப்பை புறக்கணிக்காதீர்கள். வீட்டுச் சூழல் இனிமையாக இருக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் சிறப்பு கவனம் தேவை.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்:

சில காலமாக நிலவி வந்த குடும்பப் பிரச்சனைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்மறையான செயல்பாடுகள், உங்களுக்கு மன அழுத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும். ஆனால் அவற்றை அமைதியான் முறையில் சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். இன்று வீட்டை விட்டு வெளியே வருவதை குறைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள்  அலட்சியம் தீங்கு விளைவிக்கும். வேலை தேடுபவர்களும்  இன்று அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உணர்வுபூர்வமான பிணைப்பு மிகவும் வலுவாக இருக்கும். தற்போதைய எதிர்மறை சூழ்நிலைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்:

இன்று உங்கள் பெரும்பாலான நேரத்தை நண்பர்களுடன் செலவிடுங்கள். உங்கள் வேலையை திட்டமிட்ட முறையில் ஒழுங்கமைக்கவும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சில நேரங்களில் உங்கள் அலட்சியத்தால் ஒரு சிறிய முக்கியமான வெற்றியை இழக்க செய்யும். இந்த நேரத்தில் நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். கோபம் மற்றும் எரிச்சல் உங்களை ஆட்கொள்ள வேண்டாம். எல்லா முடிவுகளிலும் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தனியாக எடுங்கள். உங்கள் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு உங்கள் நம்பிக்கையைப் பாதுகாக்கும். எதிர்மறை எண்ணங்கள் உங்களை ஆள்வதற்கு அனுமதிக்காதீர்கள்.

சிம்மம்:

வீட்டில் பெரியவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். அவர்களின் அனுபவங்களிலிருந்து பல முக்கியமான தகவல்களைப் பெறலாம். அவருடைய ஆசீர்வாதங்கள் கிடைக்கும். குழந்தைகள பணிவுடன் இருப்பார்கள். லேசான உடல்நலப் பிரச்சினைகள் உங்கள் சில வேலைகளை முழுமையடையச் செய்யலாம். ஆனால் மன அழுத்தம் உங்களை மூழ்கடிக்க விடாதீர்கள். இன்று உடலுக்கு ஓய்வு அவசியம். நீங்கள் வணிகம் தொடர்பான நடவடிக்கைகளை சரியாக பராமரிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.

கன்னி:

நீங்கள் சொத்து அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டால், இன்று உங்களுக்கு சரியான நேரம். உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் வீட்டினை மகிழ்ச்சியாக வைத்திருக்க வெளியாட்கள் யாரும் உங்கள் வீட்டில் விஷயங்களில் தலையிட வேண்டாம். பிள்ளைகளின் தொழில் பிரச்சினைகளில் உங்கள் உதவி தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர்விட்டுக்கொடுப்பதால், இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும். சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படலாம்.
 

துலாம்:

கோர்ட்டில் வழக்கு தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருந்தால், இன்று வெற்றி பெற வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். நெருங்கிய உறவினர் அல்லது சிறப்பு நண்பரைப் பற்றி செய்தியை பெறுவதில் நீங்கள் ஏமாற்றமடையலாம். ஆன்மிக பயணத்திலேயோ அல்லது தனிமையிலோ நேரத்தைச் செலவிடுவது இந்தப் பிரச்சனையிலிருந்து உங்களை விடுவிக்கும். பணியிடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள். சோர்வு மற்றும் மன உளைச்சல் ஏற்படும். 
 

விருச்சிகம்:

குழந்தைகள் அல்லது தனிநபர்களின் எந்தவொரு பிரச்சனைக்கும் நெருங்கிய நண்பரிடம் இருந்து தகுந்த ஆலோசனை அல்லது உதவி கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் மன அழுத்தமில்லாமல் இருப்பீர்கள். அரசியல் மற்றும் சமூக உணர்வுகள் அதிகரிக்கும். சில நேரங்களில்அதிகப்படியான வேலை உங்களை எரிச்சலடையச் செய்யும். உங்கள் வேலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், பொறுமையைக் கடைப்பிடிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். இளைஞர்களை கெட்ட விஷயங்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். வியாபாரத்தில் கடினமாக உழைக்கவும். வீட்டுச் சூழல் இனிமையாக இருக்கும். காலநிலை மாற்றம் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 

Sagittarius

தனுசு:

இந்த நாளின் சிறிது நேரத்தை ஆன்மீக விஷயத்தில் செலவிடுங்கள். சில காலமாக இருந்து வரும் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். நீங்கள் மீண்டும் தற்போதைய பணியில் கவனம் செலுத்தவேண்டும். கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டால், மீண்டும் தொடங்க வேண்டிய நேரம் இது. யாரையும் எளிதில் நம்பாதீர்கள். இந்த நேரத்தில்,  உங்கள் சொந்த செயல்திறனை நம்பி, முன்னேறுவது சிறந்தது. இன்று பணியிடத்தில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் புரிந்துணர்வுடனும் பணியாற்றுங்கள். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அவசியம்.  அதிகப்படியான வேலை பளு இருக்கும்.

Capricorn

மகரம்:

வீட்டில் அமைதியான சூழல் நிலவும். ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும். வீட்டின் பெரியவர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்பால் நீங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம். மாணவர்களுடனும், இளைஞர்களுடனும் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள். இன்று, குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இந்த நேரத்தில் எந்த தொழிலிலும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். நஷ்ட்டம்  ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய வியாபாரத்தில் சில முக்கியமான தகவல்கள்  கிடைக்கும். நண்பரினால் வீட்டில் ஒரு சிறிய மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதிக சோர்வு தூக்கமின்மை மற்றும் உடல் வலிக்கு வழிவகுக்கும்.

Aquarius

கும்பம்:

ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள் உங்களை ஆட்கொள்ளும். நீங்கள் வாழ்க்கையை நேர்மறையாகப் பார்க்க முயற்சிக்கிறீர்கள். இது ஒரு சிறந்த வெற்றியாகும். குழந்தைகளும் இந்த நேரத்தில் முழு ஒழுக்கத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இந்த நேரத்தில் யாரையும் நம்பாதீர்கள். வெளியூர் பயணம் செல்லுதல் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும். இன்று பணியிடத்தில் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

Pisces

மீனம்:

இன்றைய நாள் நிம்மதியாக கழியும். ஒரு சிறிய விஷயத்தில் நெருங்கிய நண்பர் அல்லது பக்கத்து வீட்டாருடன் கருத்து வேறுபாடு. ஆனால் கோபத்திற்குப் பதிலாக பொறுமையுடனும், நிதானத்துடனும் இருந்தால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். இந்த நேரத்தில் பொருளாதார நிலை சற்று பலவீனமாக இருக்கலாம். பணியிடத்தில் எதிர்காலத்திற்காக சில புதிய திட்டங்களை தீட்ட வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது உறவை மேம்படுத்தும். இந்த நேரத்தில் வீட்டின் பெரியவர்களின் உடல் நலம் சம்பந்தமாக சில பிரச்சனைகள் வரலாம்.

மேலும் படிக்க...Shukra Peyarchi 2022: சுக்கிரனின் கோவ பார்வையில் சிக்கி சீரழியும் 5 ராசிகள்...எதுவரை எச்சரிக்கை அவசியம்...

click me!