பேங்க் பேலன்ஸ் மட்டும் ரூ.130 கோடி.. ரூ.1578 கோடி சொத்து வைத்திருக்கும் பழம்பெரும் நட்சத்திர தம்பதி..

First Published Apr 9, 2024, 1:20 PM IST

ஜெயா பச்சன் தனது 76வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அமிதாப் பச்சனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான ஜெயா பச்சன், பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். சத்யஜித் ரேயின் மகாநகர் என்ற படத்தின் மூலம் தனது 15வது வயதில் பாலிவுட்டில் அறிமுகமானார்.

பின்னர் புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் (FTII) பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு வெளியான குட்டி திரைப்படத்தின் மூலம் ஜெயா பிரபலமடைந்தார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

உபார், கோஷிஷ், கோரா ககாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், அமிதாப் பச்சனுடன் இணைந்து சன்ஜீர், அபிமான், சுப்கே சுப்கே, மிலி மற்றும் கிளாசிக் கல்ட் படமான ஷோலே போன்ற பல படங்களில் நடித்தார். 

பின்னர் 1973 இல், அவர் மெகாஸ்டார் அமிதாப் பச்சனை மணந்தார். இன்று ஜெயா பச்சன் தனது 76வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதன்படி ஜெயா பச்சன், அமிதாப் பச்சன் இருவரின் சொத்து மதிப்பு ரூ.1,578 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் ஜெயா பச்சனின் தனிப்பட்ட நிகர மதிப்பு ரூ.163 கோடியாகவும், அதே ஆண்டில் அமிதாப் பச்சனின் நிகர மதிப்பு ரூ.273.74 கோடியாகவும் உள்ளது.

ஜெயாவின் வங்கி பேலன்ஸ் ரூ.10.11 கோடி என்றும், அமிதாப்பின் வங்கி பேலன்ஸ் ரூ.120.45 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரின் மொத்த பேங்க் பேலன்ஸ் ரூ.130 கோடிக்கும் மேல் உள்ளது. இருவரின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.849.11 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.729.77 கோடி. 

ஜெயா பச்சனுக்கு ரூ.40.97 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.9.82 லட்சம் மதிப்புள்ள காரும் உள்ளதாக கூறப்படுகிறது. அமிதாப்பிடம் ரூ.54.77 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் இரண்டு மெர்சிடிஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் உட்பட 16 கார்கள் உள்ளன.

ஜெயா பச்சன் கடைசியாக கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளியான Rocky Aur Rani Kii Prem Kahaani என்ற படத்தில் நடித்திருந்தார். ஜெயா பச்சன் - அமிதாப் பச்சன் தம்பதிக்கு ஸ்வேதா பச்சன், அபிஷேக் பச்சன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஸ்வேதா டெல்லியில் உள்ள கபூர் குடும்பத்தின் பேரனான தொழிலதிபர் நிகில் நந்தாவை மணந்தார், இவருக்கு நவ்யா நவேலி மற்றும் அகஸ்தியா நந்தா என்ற இரு குழந்தைகள் உள்ளனர், நடிகர் அபிஷேக் பச்சன் நடிகையும் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயை மணந்தார், இந்த தம்பதிக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பியாக இருக்கும் ஜெயா பச்சன், சமீபத்தில் 5-வது முறையாக உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்ட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!