80களுக்கு திரும்பிய ஜனனி ஐயர்... இன்ஸ்டாவில் கலக்கும் அவன் இவன் நாயகி

First Published Oct 11, 2022, 4:01 PM IST

தற்போது 80கள் நாயகிகள் போல காஸ்டியூம் அணிந்து இவர் கொடுத்துள்ள போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

janani iyer

விஷால், ஆர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்த படம் தான் அவன் இவன். இந்த படத்தை பாலா இயக்கி இருந்தார். இதில் விஷாலுக்கு ஜோடியாக கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருந்தார் ஜனனி ஐயர்.

janani iyer

அவன் இவன் படத்தின் மூலம் நல்ல பாராட்டுகளையும் இவர் பெற்றுவிட்டார். இதை தொடர்ந்து தெகிடி  உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

janani iyer

நல்ல படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நாயகியாகும் ரேஸில் இருக்கிறார் ஜனனி.  முன்னதாக திருதிரு துரு துரு என்னும் படத்திலும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து  காமியோ ரோலில் தோன்றியிருந்தார் ஜனனி ஐயர்.

மேலும் செய்திகளுக்கு... மேல் சட்டையின்றி..கவர்ச்சியின் எல்லையை கடந்த ஈஷா குப்தா..கடுப்பான நெட்டிசன்கள்

janani iyer

அவன் இவன் படத்தை தொடர்ந்து பாகன், ஏழாவது நாள் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில மலையாள படங்களிலும் தோன்றியுள்ளார்.

janani iyer

இவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 2 வாய்ப்பு கிடைத்தது. இந்த ரியாலிட்டி ஷோ தான் ஜனனி ஐயருக்கு படங்களைக் காட்டிலும் அதிக புகழை தேடி தந்தது. இதில் மூன்றாவது ரன்னரப்பாக வந்திருந்தார் ஜனனி ஐயர்.

janani iyer

தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் 3 -ல் விருந்தினராகவும், எட்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் தொகுப்பாளராகவும் வந்து சின்னத்திரை ரசிகர்களையும் மகிழ்வித்து இருந்தார் ஜனனி ஐயர்.

 மேலும் செய்திகளுக்கு... அண்ணனுக்கா ரசிகர்களிடம் கெஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷ்

janani iyer

பின்னர் தர்ம பிரபு, கூர்மம், வேழம் உள்ளிட்ட மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்தார். பின்னர் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது தொலைக்காட்சி பகீரா, காக்கை திரி, முன்னறிவான் உள்ளிட்ட நான்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

janani iyer

இந்நிலையில் பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது, போட்டோ சூட் நடத்தி வருகிறார். மற்ற நாயகிகள் போல் இல்லாமல் கொஞ்சம் டீசன்டாக இவர் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

janani iyer

அந்த வகையில் தற்போது 80கள் நாயகிகள் போல காஸ்டியூம் அணிந்து இவர் கொடுத்துள்ள போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

click me!